
PICTURE:BERNAMA
பாலிங் 1 ஏப்ரல் : தாமான் தேசா பிச்சாரா பகுதியில் இன்று காலை வீட்டிலிருந்து தப்பிய இரண்டு நாய்கள் பொதுமக்களைத் தாக்கியதில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
“நாய்கள் உரிமையாளரின் வீட்டிலிருந்து தப்பிய பின்னர் மஸ்ஜித் அருகே இருந்தவர்களை திடீரென தாக்கின. பொதுமக்கள் தடுத்து நிறுத்த முயன்றும், அவற்றை அடக்க முடியவில்லை. இறுதியாக அதன் உரிமையாளர் வந்து கட்டுப்படுத்தினார்,” என்று கெடா மாநில சுகாதாரம் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்கள் எக்ஸ்கோ மான்சோர் ஜகாரியா கூறினார் .
இந்த சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் சம்பவம் குறித்து தகவல் பெற்றுள்ளனர், மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
-முல்லை மலர் பொன் மலர் சோழன்