
கோலாலம்பூர், 13 நவ. – சமூகம் சார்ந்தத் தலைப்புகளை ஆராய்ந்து, வணிக யோசனைகள், பணியிடக் கலாச்சாரம், உறவுகள் மற்றும் பலவற்றில் தனித்துவமான ஜென் Z கண்ணோட்டங்களை வழங்கும் பாட்காஸ்ட் வித் விகடகவி எனும் ஒரு புதிய மற்றும் ஈர்க்கக்கூடியத் தொடரை ஆஸ்ட்ரோ அறிமுகப்படுத்துகிறது. ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு 9.30 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)-இல் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி, பார்வையாளர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் கண்டுக் களிக்கும் வசதியை வழங்க டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா உள்ளிட்டப் பலத் தளங்களில் கிடைக்கப்பெறும். இந்த அற்புதமானப் புதியத் தொடர் அர்த்தமுள்ள உரையாடல்களைத் தூண்டுவதையும் இன்றையத் துடிப்பானத் தலைமுறைக்கு ஏற்ற நுண்ணறிவுகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
உள்நாட்டு இயக்குநர், ராணி சுந்தரராஜூ கைவண்ணத்தில் மலர்ந்தப், பிரபல நடிகர், தொகுப்பாளர் மற்றும் அறிவிப்பாளர் விகடகவி மகேன் தொகுத்து வழங்கும் 11 அத்தியாயங்களைக் கொண்ட இந்தத் தொடர், டாக்டர் பானி, பால கணபதி வில்லியம், தாஷா, சகுந்தலா கணேசன், அருள் செல்வன், லிங்கேஸ், மாலினி ராமா, விக்கி (ராகா), டாக்டர் மணி, சசிதரன் கே ராஜூ மற்றும் டாக்டர் மஹா உள்ளிட்ட விருந்தினர்களின் ஈர்க்கக்கூடிய வரிசையை ஒன்றிணைக்கிறது. இந்தச் சிந்தனையாளர்களும் ஆளுமைகளும் சமூகப் பிரச்சினைகள், சமூகம் சார்ந்த உரையாடல்கள், கலாச்சாரக் கட்டுக்கதைகள், வணிகக் கருத்துக்கள், உறவுகள், பணியிட இயக்கவியல், மருத்துவ நுண்ணறிவுகள் போன்ற சிந்தனையைத் தூண்டும் தலைப்புகளை இத்தொடர் முழுவதும் ஆழமாக ஆராய்வார்கள். மேலும், அர்த்தமுள்ள உரையாடலைத் தூண்டும் நிஜ வாழ்க்கை உதாரணங்கள் மற்றும் வழக்கு ஆய்வுகள் மூலம் இந்த நிகழ்ச்சி வளப்படுத்தப்படும்.
ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு 9.30 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)-இல் ஒளிபரப்பாகும் பாட்காஸ்ட் வித் விகடகவி-இன் புதிய அத்தியாயங்களை டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா வழியாகக் கண்டு மகிழுங்கள்.
ஆஸ்ட்ரோ ஒன் (Astro One) தொகுப்புகள் இப்போது ரிம49.99-இலிருந்துக் கிடைக்கும். எளிதான ஸ்ட்ரீமிங், முடிவற்றப் பொழுதுபோக்கு. ஆஸ்ட்ரோ பைபரின் 500எம்.பி.பி.எஸ்-ஐ மாதத்திற்கு ரிம139.99* கட்டணத்தில் பொழுதுபோக்குத் தொகுப்புடன் இணைத்து உங்கள் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மேம்படுத்துங்கள். ஆஸ்ட்ரோ ஒன் சந்தாதாரராக அல்லது மேம்படுத்த, www.astro.com.my அணுகவும் அல்லது 03 9543 3838 எண்ணுக்கு புலனம் செய்தி அனுப்பவும்.
மேல் விபரங்களுக்கு www.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.
விலைகள் வரியை உள்ளடக்கவில்லை. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.



