
கோலாலம்பூர், 29 மார்ச்: விஷால் ஸ்த்ரிமிக்ஸ் ஏற்பாட்டில் தஸ்லி நிறுவனம் ஆதரவில் சரிகமப லில் சம்ப்ஸ் 2025 எனும் மாபெரும் இசைநிகழ்ச்சி வரும் 24 திகதி மே மாதம் மாலை மணி 6.30க்கு தலைநகர் எம்.சி.எ கட்டிடத்தில் நடைபெறவுள்ளது. இதன் செய்தியாளர் சந்திப்பு அண்மையில் தஸ்லி நிறுனத்தில் நடைபெற்றது.
இந்த இசை நிகழ்ச்சியில் தற்பொழுது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளியேறிவரும் சரிகமப லில் சம்ப்ஸ் சேர்ந்த 5 இறுதிப் போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் சரிகமப லில் சம்ப்ஸ் முதல் இறுதிப் போட்டியாளரான மலேசிய நாட்டை சேர்ந்த ஹெமித்த்ராவும் கலந்துக்கொள்கிறார். மற்ற 4 போட்டியாளர்களின் விவரங்கள் வரும் 27 திகதி அன்று சரிகமப லில் சம்ப்ஸ் 2025 இறுதிப்போட்டியில் உறுதிச் செய்யபடும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் திரு. விஷால் தெரிவித்தார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமது தஸ்லி நிறுவனத்திற்கு வற்றாத ஆதரவு வழங்கி வரும் மலேசிய ரசிகர்களுக்கு இந்த நிகழ்ச்சி வழங்குவதில் பெருமிதம் கொள்வதாக மலேசிய தஸ்லி நிறுவனத்தின் இயக்குனர் டத்தோ டாக்டர் ரவி கூறினார். மேலும் இந்நிகழ்ச்சிக்கு பங்கேற்கவிருக்கும் பாடகர்கள் அனைவரும் 15 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றும் இந்த நிகழ்ச்சி மூலம் அவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் வரும் என்றும் தெரிவித்தார். இது அவர்களின் இசைத்துறை வளர்ச்சிக்கு பெரும் உந்துதலாகவும் தூண்டுகோலாகவும் இருக்கும் எனவும் கூறினார். இதனிடைய செய்தியாளர்களிடம் பேசிய மலேசிய தஸ்லி நிறுவனத்தின் இணை இயக்குனர் டத்தின் எஸ். காவேரி இம்மாதிரியான நிகழ்ச்சிகளை நேரில் காண்பது அரிது. மக்கள் அனைவரும் குடும்பத்தோடு இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மறக்க முடியாத புதிய அனுபவத்தை பெறலாம் என்றார். ஜீ தமிழ் நிறுவனத்தாருக்கும் தமது நன்றியினை தெரிவித்துகொண்டார்.

மக்களுக்கு இந்த இசை நிகழ்ச்சி சிறந்த அனுபவமாக இருக்கும். எனவே, இந்த வாய்ப்பை நழுவ வேண்டாம் என ஜீவி இண்டர்நேஷனல் உரிமையாளர் டத்தோ கணேசன் தெரிவித்தார். தாமரை ஜுவெல்லர்ஸ் டத்தோ ரமேஷ் அவர்களுக்கும் இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கு வாய்ப்பு வழங்கிய ஜி தமிழ் திரு. பூங்குன்றன் அவர்களுக்கும் மற்றும் ஆதரவு வழங்கிய ஊடக நண்பர்களுக்கும் அனைவர்களுக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் திரு. விஷால் தமது நன்றியினைத் தெரிவித்துக்கொண்டார்.
நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை www.ticket2u.com.my என்ற அகப்பக்கத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
-யாழினி வீரா