
விஜய் டிவியின் பெயரை பயன்படுத்தி, சில மர்ம நபர்கள் பொதுமக்களிடம் பண மோசடி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து விஜய் டிவி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி, மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
👉 விஜய் டிவி அல்லது டிஸ்னி ஸ்டார் குழுமம், எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளுவதற்காக பணம் கேட்டுவிடாது.
👉 நமது எந்த நிகழ்ச்சியிலும் நடிக்கவோ, தோன்றவோ பணம் செலுத்துவதன் மூலம் வாய்ப்பு பெறுவது நடைமுறையில் இல்லை.
👉 தயாரிப்பு நிறுவனங்கள் அல்லது நிகழ்ச்சி நடத்துபவர்கள் எந்தவொரு நபரிடமிருந்தும் பணம் பெற்றுக் கொள்ள நாங்கள் அனுமதியில்லை.
👉 நாம் வழங்கும் எந்த வாய்ப்பிற்காகவும் தனிப்பட்ட தகவல், புகைப்படங்கள், வீடியோ காட்சிகள், அல்லது பணம் கோருபவர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மோசடி அழைப்புகள் மற்றும் போலியான வாய்ப்புகளிலிருந்து பாதுகாப்பாக இருங்கள்!
விஜய் டிவியின் பெயரை தவறாக பயன்படுத்தி, சிலர் நிகழ்ச்சிகளில் வாய்ப்பு வழங்குவதாகக் கூறி பணம் கோரும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், இதுபோன்ற மோசடி செயல்கள் குறித்து தகவல் கிடைத்தால், அதிகாரப்பூர்வமாக விஜய் டிவி நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்கலாம்.
நீங்கள் எவரிடமும் பணம் செலுத்தி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியாது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்!
-யாழினி வீரா