Tazhal Media – தழல் மீடியா

/ Jun 07, 2026
Latest News
tms

மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என பெயர் மாற்றி அதிபர் ட்ரம்ப் உத்தரவு

படம் : கூகுள்

அமெரிக்கா, 11 பிப்ரவரி – மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என பெயர் மாற்றி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 4-ம் தேதி புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “விரைவில் ஒரு மாற்றத்தை அறிவிக்க உள்ளோம். மெக்சிகோ வளைகுடாவின் பெயரை அமெரிக்க வளைகுடா என மாற்றப்போகிறோம். ஏனென்றால் அது எங்களுடையது. அமெரிக்க வளைகுடா ஒரு அழகான பெயர். அது மிகச்சரியாக உள்ளது” என்று அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், தற்போது மெக்சிகோ வளைகுடாவை, அமெரிக்க வளைகுடா என பெயரை மாற்றம் செய்யும் உத்தரவில் அதிபர் ட்ரம்ப் நேற்று முன்தினம் கையெழுத்திட்டுள்ளார்.

மெக்சிகோவில் நடைபெறவுள்ள கால்பந்து போட்டியை காண விமானத்தில் பறந்துகொண்டிருந்தபோது, இந்தப் பெயர் மாற்றத்துக்கான உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். மேலும், பிப்ரவரி 9-ம் தேதியை அமெரிக்க வளைகுடா நாள் என்றும் அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

-ஶ்ரீஷா கங்காதரன்

Scroll to Top