Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

‘ஊர் சுற்றும் பாய்ஸ்’ என்றப் பயணத் தொடரை ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)-இல் கண்டு மகிழுங்கள்

கோலாலம்பூர், 15 மே 2025 – அனைத்து மலேசியர்களும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்
இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாகத் தொலைக்காட்சி,
ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் ஒளிபரப்பாகும் உற்சாகமானப்
பயணத் தொடரான ​​ஊர் சுற்றும் பாய்ஸ்-இன் புதிய அத்தியாயங்களைக் கண்டு
மகிழலாம். இந்தத் தொடர் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கும் நிலப்பரப்புகளின்
மறக்க முடியாதச் சாகசத்திற்கு அழைத்துச் செல்வதுடன், சுவையான உணவு வகைகளைச்
சித்தறிப்பதுடன் சிலிர்ப்பூட்டும் அனுபவங்களை வழங்கும்.
‘உணவுப் பிரியர் (தியாகு பி)’, ‘சாகச விரும்பி (கிரிஸ் ஜே ஹரிஷ்)’ மற்றும் ‘கனவுகளைக்
கொண்டவர் (டவியூ புவனன்)’ என மூன்றுக் கருப்பொருளில் உள்ளூர் திறமையாளர்களால்
​​ஊர் சுற்றும் பாய்ஸ் தொகுத்து வழங்கப்படும். அவர்கள் சுவையானப் புதிய உணவுகளைக்
கண்டறிவதோடுத், துடிப்பான மற்றும் துணிச்சலான நடவடிக்கைகளை அனுபவித்து,
ஒவ்வொரு அழகிய நிலப்பரப்பு மற்றும் கலாச்சாரத்தின் ஆழமானக் கதைகளை
ஆராய்வதால் இந்த உள்ளூர் தமிழ் பயணத் தொடரின் வழி மலேசியா முழுவதுமான ஒரு
பயணத்தில் அவர்களுடன் இணையுங்கள்.

முதன்முறையாகக் காட்சிப்படுத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியின் தனித்துவமான வடிவம்,
அதிகம் அறியப்படாதச் சுற்றுலாத் தளங்கள், வரலாற்றுத் தளங்கள் மற்றும் உள்ளூர்
சந்தைகள், தெரு உணவுக் கடைகள் மற்றும் கலாச்சாரக் கூறுகள் நிறைந்த
உணவகங்களில் காணப்படும் பல்வேறுச் சுவையான உணவுகளைச் சித்தறிக்கிறது.
பாராகிளைடிங், வெள்ளை-நீர் ராஃப்டிங், ஸ்நோர்கெல்லிங், நீர் மூழ்குதல் மற்றும் பலத்
துணிச்சலான நடவடிக்கைகளைக் கண்டு மகிழுங்கள்.
‘சுற்றுப்பயணம் ஆடம்பரமாக இருக்க வேண்டிய அவசியமில்லை, குறைந்தச் செலவில்
மனநிறைவாக இருக்கலாம்’ என்ற வலுவான மற்றும் சக்திவாய்ந்தச் செய்தியை
பார்வையாளர்களிடையே விதைப்பதை நோக்கமாக முகேஸ்வரன் சிவானந்தம் இயக்கிய
இந்த 10 அத்தியாய நிகழ்ச்சிக் கொண்டுள்ளது. கூடுதலாக, ஊர் சுற்றும் பாய்ஸ், மீனவர்
சமூகம், பூர்வகுடி சமூகத்தினர் போன்ற உள்ளூர் சமூகங்களின் வாழ்க்கை முறையுடன்,
ஒவ்வொரு இடத்தின் கலாச்சாரம் மற்றும் மரபுகளையும் சித்தறிக்கிறது.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)
வாயிலாகத் தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில்
ஒளிபரப்பாகும் ஊர் சுற்றும் பாய்ஸ்-இன் புதிய அத்தியாயங்களைக் கண்டு களியுங்கள்.
ஆஸ்ட்ரோ ஒன் (Astro One) தொகுப்புகள் இப்போது ரிம49.99-இலிருந்துக் கிடைக்கும். எளிதான ஸ்ட்ரீமிங், முடிவற்றப் பொழுதுபோக்கு. ஆஸ்ட்ரோ பைபரின் 500எம்.பி.பி.எஸ்-ஐ மாதத்திற்கு ரிம139.99 கட்டணத்தில் பொழுதுபோக்குத் தொகுப்புடன் இணைத்து உங்கள்
ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மேம்படுத்துங்கள். ஆஸ்ட்ரோ ஒன் சந்தாதாரராக அல்லது

மேம்படுத்த, www.astro.com.my  அணுகவும் அல்லது 03 9543 3838 எண்ணுக்கு புலனம்
செய்தி அனுப்பவும்.
மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

Scroll to Top