
கோலாலம்பூர், 11 ஜூன்: தளபதி விஜயின் தலைமையில் இயங்கும் தமிழக வெற்றி கழகம் (TVK), தனது தெற்காசியா மண்டல தகவல் தொழில்நுட்ப (IT) மற்றும் சமூக ஊடக அணியில், மலேசிய விஜய் ரசிகர்கள் (MVF) இயக்கத்தைச் சேர்ந்த உறுபினர்களை அதிகாரபூர்வமாக நியமித்துள்ளது.
அவர்களின் விவரம் பின்வருமாறு:-
திரு. வீரா இளங்கோவன்
திருமதி. V. லெட்சுமி
திரு. L.V முகேந்திரன் BA.,
திரு. வினோத் தர்ஷன்
திரு. கார்த்திக் சசி கண்ணா
திரு. தினேஷ்வரன் கிருஷ்ணன்
இந்த நியமனம் மூலம், மலேசியாவில் இருந்து தொலைதூரத்தில் இருந்தும் தளபதியின் அரசியல் ஊடக வேலைகளில், இளைஞர்களின் பங்கு மேலும் வலுப்பெறும் வகையில் அமைந்துள்ளது. த.வெ.க. இயக்கத்தின் நோக்கங்களை மன்றங்களில் மட்டுமின்றி, இணைய வழியிலும் பரப்ப விரும்பும் தளபதி விஜய், வெளிநாட்டுப் பகுதிகளிலும் தனது ரசிகர்கள் மூலம் தன்னுடைய எண்ணங்களை கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளார்.
இதனிடையே, மலேசிய விஜய் ரசிகர்கள் இயக்கத்தின் தலைவர் திரு. ஷர்மாநாத், இந்த நியமன அறிவிப்பை எதிரொலிக்கும் வகையில் தனது வாழ்த்துரையையும் உணர்ச்சிபூர்வமான பதிவையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

தனது பதிவில் அவர் கூறியதாவது:
“இன்று மலேசிய விஜய் ரசிகர்கள் இயக்கத்திற்கு ஒரு மிக முக்கியமான நாள். நம்முடைய குழுவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், தளபதி விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் தெற்காசிய தகவல் தொழில்நுட்ப மற்றும் சமூக ஊடக அணிக்குள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது எங்களுக்கான பெருமை மட்டுமல்ல, மலேசியாவில் உள்ள அனைத்து தமிழ் இளைஞர்களுக்குமான அங்கீகாரம். தளபதியின் அரசியல் நோக்கங்களை நம்மால் இணையவழியாக உலகம் முழுவதும் கொண்டுசெல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த பொறுப்பை அன்போடு, அக்கறையோடு, முழு நேர்மையோடு நிறைவேற்றுவோம். தளபதிக்கு வாழ்த்து! எங்களது அணியினருக்கு வாழ்த்துகள்!”
இவ்வாறு தனது மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் பதிவு செய்துள்ளார். இச்செய்தி வெளியான பிறகு, மலேசிய விஜய் ரசிகர்கள் இயக்கம் சார்பாக உள்ள உறுப்பினர்கள், அவரது வாழ்த்துரையை பகிர்ந்து கொண்டு நன்றிகளை தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் இந்த நிகழ்வுக்கு உற்சாக வரவேற்பு கிடைத்துள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மலேசிய விஜய் ரசிகர்கள் (MVF) இயக்கத்தில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்தவர்கள். தங்கள் தொழில்நுட்ப திறமைகள், சமூக ஊடக மேலாண்மை அனுபவம், மற்றும் சமூக பொறுப்பு மற்றும் கடப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் இப்போது TVK தெற்காசிய மண்டலத்தின் IT மற்றும் சமூக ஊடக அணியின் முக்கியக் குரல்கள் ஆக உள்ளனர். இந்த நியமனத்தால், தமிழக வெற்றி கழகம் இனி மட்டுப்பட்ட மாநிலக் கட்சியாக அல்ல, பன்னாட்டு தமிழ் சமூகங்களை இணைக்கும் இயக்கமாக முன்னேறும் வாய்ப்பை உறுதிப்படுத்துகிறது. இது தமிழ் இளைஞர்களின் நவீன சிந்தனைகளை, தொழில்நுட்ப வல்லமைகளை, மற்றும் அரசியல் விழிப்புணர்வை இணைக்கும் ஒரு புதிய கட்டமாக பார்க்கப்படுகிறது.

தளபதியின் ரசிகர்கள் இனி ரசிகர்களாக மட்டும் அல்ல, ஒரு அரசியல் மற்றும் சமூக மாற்றத்தின் தூண்களாக வளர்ந்து வருகின்றனர். இந்த நியமனம், அதன் ஒரு முக்கியமான கட்டமாகும்.
-யாழினி வீரா



