
அம்பாங், 2 பிப்ரவரி — பாண்டார் பாரு அம்பாங் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு எண்ணேய் சாத்தும் விழா நேற்று உற்சாகமாக நடைபெற்றது. பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு தெய்வீக அனுபவத்தை பெற்றனர்.
மூல மூர்த்திக்கு எண்ணெய் அபிஷேகம் செய்யும் இந்த நிகழ்வு, ஆலய புனரமைப்பு பணிகளில் ஒரு முக்கிய கட்டமாகும். விசேஷ பூஜைகள், வேத மந்திரங்கள் மற்றும் பக்தர்களின் பக்திப் பரவசத்துடன், நிகழ்வு சிறப்பாக நடந்தது.
இந்த புனித நிகழ்வில் மக்கள் கலைஞர் கவிமாரனும் கலந்துகொண்டு, பூஜைகளில் பங்கேற்று தனது ஆழ்ந்த பக்தியை வெளிப்படுத்தினார். அவர் ஆலய நிர்வாகத்தாருடன் இணைந்து, கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டார். கோவில் பரிவார தெய்வங்களுக்கும், துவாரபாலகர்களுக்கும் எண்ணேய் சாத்தி, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
கோவில் நிர்வாகம், இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தது. பக்தர்களுக்காக நீருந்தொட்டிகள், பிரசாதம் வழங்கும் மண்டபங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை சரிவர செய்யப்பட்டிருந்தன.
அகிலத்தின் மங்களத்திற்காகவும், பக்தர்களின் நன்மைக்காகவும் இந்த எண்ணேய் சாத்தும் பூஜை நடத்தப்பட்டதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். கும்பாபிஷேகத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறவுள்ளன.
-வீரா இளங்கோவன்