
கோலாலம்பூர், ஏப்ரல் 3: மலேசியாவில் இந்து ஆலய நில விவகாரம் சமீபத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது, குறிப்பாக ஆலய நிர்வாகத்திற்குச் சொந்தமான நிலங்களில் அமைக்கப்படாத ஆலயங்களைச் சுற்றி உருவான தகவல்களால் சமூக ஊடகங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மலேசிய இந்து சங்கம் ஒவ்வொரு ஆலய நிலப் பிரச்சினையும் தனித்துவமானது என்பதை உணர்ந்துள்ளது. எனினும், அனைத்து ஆலயங்களின் நில உரிமையை பாதுகாக்கும் வகையில் அரசாங்கத்திற்கு நிலையான தீர்வுகளை முன்வைக்க, ஆலய நில விவரங்களை ஒருங்கிணைத்து சரியாக பதிவு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.
இந்த தகவல்களைத் திரட்டுவதன் மூலம், மலேசிய இந்து சங்கத்தின் சட்ட ஆலோசக குழு தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஆலய நிலங்களைப் பற்றிய எதிர்மறைச் சூழ்நிலைகளை சமாளிக்க முடியும்.
அதனால், அனைத்து ஆலய நிர்வாகங்களும், மாநில மற்றும் வட்டாரத் தலைவர்களும் கீழ்க்கண்ட Google Form-ஐ நிரப்பி, தேவையான ஆவணங்களை பதிவேற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உங்கள் ஒத்துழைப்பே மலேசியாவில் உள்ள இந்து ஆலயங்களின் பாதுகாப்புக்காக மிக முக்கியமானதாகும்.