
கோலாலம்பூர், 19-ஜனவரி– கடந்த நான்கு ஆண்டுகளில் 167 பேர் RM160.1 மில்லியனை வழக்கறிஞர்களால் இழந்துள்ளதாக மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது. இவ்வழக்குகள் மோசடி மற்றும் நிதி மேலாண்மையில் தவறுகளை கொண்டிருந்தன.
புக்கிட் ஆமான் வர்த்தக குற்ற விசாரணை துறை (CCID) இயக்குநர் டத்தோக் சிரி ரம்லி முகமட் யூசுப், 2022ஆம் ஆண்டில் மோசடி வழக்குகள் அதிகரித்ததாகவும், 62 வழக்குகளில் மட்டும் RM62.8 மில்லியன் இழப்புகள் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
2021 முதல்:
- 2021: 39 வழக்குகள் – RM56.3 மில்லியன் இழப்பு
- 2022: 30 வழக்குகள் – RM11.7 மில்லியன் இழப்பு
- 2023: 35 வழக்குகள் – RM29.7 மில்லியன் இழப்பு
பாதிக்கப்பட்டவர்களில் 113 ஆண்களும் 54 பெண்களும் அடங்குவர். அதற்கு மேலாக, 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விசாரணையில், சில வழக்கறிஞர்கள் தனிப்பட்ட நன்மைக்காக வாடிக்கையாளர் நிதியையும் சொத்துகளையும் தவறாக பயன்படுத்தியதும் வெளிப்பட்டது. சமீபத்தில், ஒரு நிறுவன இயக்குநர் RM19 மில்லியனை இழந்த நிகழ்வு குறிப்பிடத்தக்கது.
கடுமையான ஒழுக்கநடை சட்டங்களும், நெருக்கமான கணக்காய்வுகளும், மற்றும் எளிதான புகார் மனு முறைகளும் அவசியமாக உள்ளன என்று ரம்லி வலியுறுத்தினார்.
கடுமையான ஒழுக்கநடை மீறல்களுக்காக, வழக்கறிஞர்களின் உரிமம் ரத்தாகும் அளவிற்கு பார்கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
-வீரா இளங்கோவன்