
ஷா ஆலாம், 1 பிப்ரவரி — சிலாங்கூரில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் கைப்பேசிகளை திருடி வந்த கும்பலைச் சேர்ந்த 2 பெண்கள் மற்றும் 2 ஆண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் கான் தெரிவித்தார்.கைது செய்யப்பட்ட நால்வரும் 31 முதல் 61 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். கைப்பேசிகளை திருடி வெளிநாடுகளில் விற்பனை செய்யும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.41 வயது பெண் இந்த திருட்டுக் கும்பலை வழிநடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களிடமிருந்து 13 விவேகக் கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக டத்தோ ஹுசைன் ஓமர் கான் மேலும் தெரிவித்தார்.கைதான நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது, மேலும் இது போன்ற திருட்டு செயல்களில் ஈடுபடும் மற்றவர்களையும் அடையாளம் காணும் பணியில் காவல்துறை தீவிரமாக செயல்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
–