
கோலாலம்பூர், 5 நவ: – திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட நட்பைச் சித்தறிக்கும் இதயம் தொட்ட கதைகள் எனும் தொடரின் புதிய அத்தியாயங்களை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம்.
போராட்டங்கள் மூலம் வலிமையையும் அர்த்தத்தையும் உணரும் அர்ஜுன், கௌதம் மற்றும் ரவி ஆகிய மூன்று நண்பர்களைப் பிரபல உள்ளூர் திரைப்பட இயக்குநர் கோவிந்த் சிங் இயக்கியுள்ள இந்த மனதைக் கவரும் தொடர் சித்தறிக்கின்றது.
தனது அன்பு மனைவி மீராவிற்கு 4-ஆம் நிலை வயிற்றுப் புற்றுநோய் இருப்பதைக் கண்டறிந்தப்பின் அவர் மீதான அர்ஜுனின் அன்பும் பக்தியும், கௌதம் மற்றும் ரவிக்குக் கஷ்டங்களிலும் மீள்தன்மையின் அழகை நினைவூட்டுகின்றது. இதற்கிடையில், சற்றுக் கருமையானச் சருமமுடைய, அதிக உடல் எடைக் கொண்டக் கௌதம், மாற்றுத்திறனாளிப் பெண்ணானத் திவ்யாவுடன் ஒரு நெகிழ்ச்சியானப் பயணத்தைத் தொடங்குகிறார். நெகிழ்ச்சியான உரையாடல்கள், பகிரப்பட்டச் சிரிப்புகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியத் தருணங்களால் நிறைந்த அவர்களின் வளர்ந்து வரும் பிணைப்பு, இருவருக்கும் நம்பிக்கையையும் தைரியத்தையும் தருகிறது. கௌதமின் அசைக்க முடியாத ஆதரவு திவ்யா மீண்டும் மகிழ்ச்சி அடைய உதவுகிறது. அதே நேரத்தில் திவ்யாவின் மன உறுதி தனது சுய மதிப்பைத் தழுவிக்கொள்ளக் கௌதமைத் தூண்டுகிறது.
மறுபுறம், ரவி, ஹேமாவுடனானத் தனது திருமணத்தை வழிநடத்தப் போராடுகிறார். ஹேமாவின் அதிகச் செலவுச் செய்யும் பழக்கம், கட்டுப்படுத்தும் சுபாவம் மற்றும் பாதுகாப்பின்மை ஆகியவை அவர்களின் உறவை ஒரு போர்க்களமாக மாற்றுகிறது. தனக்குச் சவால்கள் இருந்தாலும், அர்ஜுன் மற்றும் கௌதம் ஆகியோரை அவர்களின் மதிப்புகளுக்கு உண்மையாக இருக்கவும், துன்பங்களைத் தாண்டி விடாமுயற்சியுடன் இருக்கவும் ரவி ஊக்குவிக்கிறார். பகிரப்பட்ட வலியாலும், நிறைவான வாழ்க்கைக்கான விருப்பத்தாலும் ஒன்றுபட்டு, தங்களின் தனித்துவமான வழிகளில் சுதந்திரத்தையும் மகிழ்ச்சியையும் பின்தொடர்ந்துச், சுய மதிப்பின் உண்மையான அர்த்தத்தையும் நட்பின் சக்தியையும் வழியில் கண்டறிந்து, ஒருவருக்கொருவர் ஆதரவாக உள்ளனர்.
ஃபீனிக்ஸ் பிலிம்ஸ் செண்டிரியான் பெர்ஹாட்டிலிருந்து கலைவாணி பாண்டியலகப்பன் தயாரித்த, இதயம் தொட்ட கதைகள், லோக வர்மன், தியா லக்ஷனா, தேவகுரு, ஹேமாஜி, குபேன் மகாதேவன், புனிதா சண்முகம் மற்றும் பலர் உள்ளிட்டப் பிரபல நடிகர்களின் வரிசையைக் கொண்டுள்ளது.
திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணும் இதயம் தொட்ட கதைகள் தொடரின் புதிய அத்தியாயங்களைக் கண்டு மகிழுங்கள்.
ஆஸ்ட்ரோ ஒன் (Astro One) தொகுப்புகள் இப்போது ரிம49.99*-இலிருந்துக் கிடைக்கும். எளிதான ஸ்ட்ரீமிங், முடிவற்றப் பொழுதுபோக்கு. ஆஸ்ட்ரோ பைபரின் 500எம்.பி.பி.எஸ்-ஐ மாதத்திற்கு ரிம139.99* கட்டணத்தில் பொழுதுபோக்குத் தொகுப்புடன் இணைத்து உங்கள் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மேம்படுத்துங்கள். ஆஸ்ட்ரோ ஒன் சந்தாதாரராக அல்லது மேம்படுத்த, www.astro.com.my அணுகவும் அல்லது 03 9543 3838 எண்ணுக்கு புலனம் செய்தி அனுப்பவும்.
மேல் விபரங்களுக்கு www.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.
*விலைகள் வரியை உள்ளடக்கவில்லை. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.


