
சித்தியவான், 4 ஏப்ரல் 2025 – பேராக் மாநிலத்தின் செத்தியவான் பகுதியில் சற்றுமுன் (பின்னிரவு 1 மணி) தொடங்கிய தொடர்ந்த கனமழை பல வீடுகள் மற்றும் சாலைகள் திடீர் வெள்ளத்தில் மூழ்கடித்தது.
தகவல்கள் கூறுவதப்படி, மழை தொடர்ந்து பல மணி நேரமாக பெய்ததால், நீர் வடிகால் அமைப்புகள் செயலிழந்தன, இதனால் நீர் தேங்கியது. இதனால் இடம்மாற வேண்டிய நிலை ஏற்படலாம் என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். உள்நாட்டு மீட்புப் படைகள் (NADMA), தீயணைப்பு மற்றும் மீட்புப் படைகள் (BOMBA) ஆகியவை செயல்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. வெள்ளம் மேலும் தீவிரமாவதா என்பதற்கான சூழ்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள், நிலவரம் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தற்பொழுது நிலைமை கட்டுபாட்டுக்குள் இருப்பதாக தேவிக்கபட்டுள்ளது. இது தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாகவே இதுபோன்ற வெள்ள பிரச்சினை ஏற்பட்டு வருவதாக மக்கள் தெரிவித்து உள்ளனர்.
-யாழினி வீரா