Tazhal Media – தழல் மீடியா

/ Jun 07, 2026
Latest News
tms

சிலாங்கூரில் பரவும் ‘Influenza’ – பள்ளிகளில் பெரும் பாதிப்பு

Picture ; Vanakkam Malaysia

மார்ச் 8 முதல் செப்டம்பர் 27 வரை மாநிலம் முழுவதும் 88 இடங்களில் இந்த நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.

சிலாங்கூர் சுகாதார துறை தற்போது நிலவிய நிலையை நெருக்கமாக கண்காணித்து, ஒவ்வொரு மாவட்ட சுகாதார அலுவலகத்தின் மூலம் அபாய மதிப்பீடுகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

”Influenza’ நோயானது காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் என்றும், முதன்மையாக குழந்தைகள் மற்றும் நீண்டநாள் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த காய்ச்சல் தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தும் அபாயமுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமையில், எந்த பள்ளிகளிலும் தற்காலிகமாக மூடுவதற்கான பரிந்துரைகள் சுகாதார அலுவலகங்களிலிருந்து இதுவரை பெறப்படவில்லை என ஜமாலியா தெரிவித்தார்.

மாநில அரசு சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து பிப்ரவரி மாதம் முதல் மூன்றாம் வகுப்பு குழந்தைகளுக்கு இலவச‘Influenza’ தடுப்பூசி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

செப்டம்பர் 20ஆம் தேதி முதல் செப்டம்பர் 27ஆம் தேதி வரை ‘Influenza’ நோய்த்தொற்று 602-இருந்து 1,128 ஆக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Scroll to Top