
சிங்கப்பூர் 9 ஏப்ரல்: திருமண விழாவில் வைத்திருந்த ‘ang pow’ (விருந்தினர்கள் கொடுத்த பணஅஞ்சல்கள்) தொகையான சுமார் SGD 50,000 திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி மதியம் 1 மணியளவில் பீச் ரோட்டில் உள்ள ஓர் ஹோட்டலில் நடைபெற்ற திருமண விருந்து நிகழ்ச்சியின் போது நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
திருமண விழா நடைபெற்றபோது, இரு தனித்தனி பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த பணத்தை ஒரு 36 வயதான நபர் திருடியதாக சந்தேகிக்கப்படுகிறது.
கடுமையான விசாரணை மற்றும் கண்காணிப்பு காட்சிகள் மூலம் போலீசார் சந்தேகநபரை அடையாளம் காண முடிந்தது. அவரை ஏப்ரல் 7ஆம் தேதி கைது செய்தனர். அவரது வசமிருந்து SGD 3,000 பணம் மீட்கப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டார், மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.
-இளவரசி புவனஷங்கரன்