
Picture : Awani
மலேசிய ‘Perdana Menteri Dato Anwar bin Ibrahim‘ ( ,’Israel-லால்’ )தடுத்து நிறுத்தப்பட்ட ‘Global Sumud Flotilla
(GSF)-மிஷனில் பங்கேற்ற மலேசிய செயற்பாட்டாளர்கள் பாதுகாப்பாக விடுவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அவர் தெரிவித்ததில், “மலேசியர்கள் எங்கு இருந்தாலும், அவர்களின் உயிர் பாதுகாப்பே எங்கள் அரசின் முதன்மை பொறுப்பு. அவர்களை விடுவிக்க சிறந்த முயற்சிகளை மேற்கொள்வோம்” என்றார்.
Israel-லின் நடவடிக்கையை கடுமையாகக் கண்டித்த ‘Anwar’, இது மனிதாபிமான பணிக்கு எதிரான அநீதி என்றும், சர்வதேச சட்ட மீறலாகும் என்றும் சுட்டிக்காட்டினார். மலேசிய அரசு,United Nations (UN) உட்பட உலக தலைவர்களிடம் ,’Israel-லின்’ கொடுமையை நிறுத்த வலியுறுத்தும்.
இந்நிலையில், உலகின் பல நாடுகளில் மக்கள் லின் நடவடிக்கைக்கு எதிராக தெருக்களில் போராட்டம் நடத்தினர். துருக்கி, ஆப்பிரிக்கா, ஆசியா பகுதிகளில் “Palestin-னுக்கு சுதந்திரம் வேண்டும்” எனக் கோஷமிட்டனர்.
பாதுகாப்புக்காக, சில தன்னார்வலர்கள் தங்களின் கைப்பேசிகளை அணைத்து வைத்ததாகவும், தகவல் வெளியேறாமல் பார்த்துக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மலேசிய துணைப் பிரதமர் பதில்லா யூசுப் கூறியதாவது: “Israel-லின்’ கொடுமைக்கு எவ்வித சமரசமும் செய்யமாட்டோம். எங்கள் மக்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு” என்றார்.
மலேசிய மக்கள் பலரும் சமூக ஊடகங்களில் “Free Gaza, Save Our Activists” என்ற ஹாஷ்டேக்குகளுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.
‘Anwar’ தனது செய்தியை முடிக்கையில், “நாம் அமைதி, மனிதாபிமானம், நீதிக்காக எப்போதும் நிற்போம். மலேசிய மக்களின் மரியாதையை காப்பாற்றுவதே அரசின் கடமை” என்றார்.



