Tazhal Media – தழல் மீடியா

/ Mar 15, 2025
Latest News
tms

வங்கி மோசடியில் பிரபலங்கள்; லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை!

Picture: Bernama

புத்ரஜெயா, 3 பிப்ரவரி — வங்கி அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து கடன் மோசடிகளில் ஈடுபட்ட உள்ளூர் பிரபலங்களை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான (SPRM) தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது என அதன் தலைமை இயக்குநர் தான் ஸ்ரீ அசாம் பாகி தெரிவித்தார்.

மோசடித் திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் சில பிரபலங்கள் விளம்பரங்களில் இடம்பெற்றுள்ளதாகவும், அவற்றின் பின்னணியில் செயல்படும் நிதி ஆலோசனை குழுக்களையும் வங்கி அதிகாரிகளையும் SPRM தீவிரமாக விசாரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டிருப்பதோடு, அவர்களுடன் தொடர்புடைய பலரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அசாம் பாகி உறுதிப்படுத்தினார்.

மேலும், இந்த மோசடிகள் மூலம் சம்பாதிக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பாக SPRM அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக Ferrari F8 Spider, Lexus RC300, Mercedes-Benz GLC43, BMW, Toyota Alphard, Mazda உள்ளிட்ட 9 சொகுசு வாகனங்கள், ரி.ம. 11.1 மில்லியன் மதிப்பிலான ஆடம்பரக் கடிகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

SPRM இந்த நிதி மோசடியில் தொடர்புடைய மேலும் பலரை விசாரிக்க உள்ளதாகவும், சட்டத்தின் முழு கடுமையுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என அசாம் பாகி உறுதியாக தெரிவித்துள்ளார்.

-வீரா இளங்கோவன்

Scroll to Top