Tazhal Media – தழல் மீடியா

/ Mar 15, 2025
Latest News
tms

கத்தும்பா தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு நிரந்தர இடம் வேண்டும் – மேலாளர் வாரியத் தலைவர் கிருஷ்ணன் வலியுறுத்தல்

Picture: Facebook

பாலிங், 31 ஜனவரி — பாலிங் பெக்கான் தாவார் தேசியப் பள்ளியின் இணைக் கட்டிடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் கத்தும்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி, தனிக்கூட நிரந்தர இடமின்றி இயங்குவதை மேலாளர் வாரியத் தலைவர் கிருஷ்ணன் முனியாண்டி கவலை வெளியிட்டுள்ளார்.

1986ஆம் ஆண்டு பாலிங், சுங்கை தாவார் பகுதியில் 5 ஏக்கர் நிலம் தமிழ்ப்பள்ளிக்காக ஒதுக்கப்பட்டிருந்தாலும், இன்று வரை அந்நிலத்தில் பள்ளிக்கட்டிடம் எழுப்பப்படவில்லை. இந்த நிலைமையை கல்வி அமைச்சு தீவிரமாகப் பற்றி, அப்பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட சுங்கை தாவார் நிலத்தில் பள்ளி கட்டும் முயற்சியில் முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

சுங்கை தாவார் பகுதியில் ஒதுக்கப்பட்ட நிலம் இன்று வரை பள்ளி பெயரில் உள்ளதாக நில ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிருஷ்ணன் தெரிவித்தார். தற்போது கத்தும்பா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலானோர் சுங்கை தாவார் தோட்டத்திலேயே வசிப்பவர்கள் என்பதால், அங்கு பள்ளி கட்டப்பட்டால் அவர்களுக்கு பெரிதாக இட மாற்றம் தேவையில்லாது இருக்கும்.

இப்போது பள்ளிக்கு நிரந்தர இடமின்றி தற்காலிக நிர்வாக சிக்கல்கள் உள்ளதால், சுங்கை தாவார் நிலத்தில் கட்டடம் அமைக்க, கல்வி அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். இதனால், பள்ளிக்கு நிரந்தர அடிப்படை கிடைத்ததோடு, எதிர்காலத்தில் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

-யாழினி வீரா

Scroll to Top