
பத்துமலை, 3 பிப்ரவரி — மலேசியாவின் புகழ்பெற்ற பத்து மலை முருகன் ஆலயத்தில், முருகனின் பக்திப் பாடலுக்கான படப்பிடிப்பு சிறப்பாக நடைபெற்றது. இந்த பாடலில் நாட்டின் பிரபல கலைஞர் MG விஜய் மற்றும் அவரது குழுவினர் பங்கேற்று, பக்தி உணர்வுகளைப் பொங்க வைக்கும் ஒரு நேர்த்தியான இசைப் பரிசை வழங்கியுள்ளனர்.
இவ்விசேஷமான பாடல் வெளியீட்டு விழா, வரும் பிப்ரவரி 10ஆம் தேதி பத்து மலை முருகன் கோவிலில் நடைபெறவுள்ளது. பக்தர்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்து கொண்டு, பக்தி அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுமாறு தயாரிப்பு குழு கேட்டுக்கொள்கிறது.
மலேசிய இந்தியச் சமூகத்திற்கான முழுமையான பக்திப் பரிசாக உருவாகியுள்ள இந்த பாடல், முருகன் பக்தர்களின் உள்ளங்களில் இடம்பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மலேசிய கலைஞர்களின் அர்ப்பணிப்புடன் உருவாகியுள்ள இந்த பக்திப் பாடல் உங்கள் அனைவரின் ஆதரவையும், ஆசீர்வாதத்தையும் எதிர்நோக்குகிறது.
முருகனின் திருவருளால் எல்லோரும் ஒன்று சேர்ந்து இந்த விழாவை சிறப்பிக்க வருக!
-வீரா இளங்கோவன்