Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

பேய்கள் நடமாடும் இடம் – பண்டார் சென்தோசாவில் திகில் நிகழ்ச்சி!

கோலாலம்பூர், 24 அக். –
திகில் அனுபவத்தை விரும்பும் மக்களுக்கு புதுமையான நிகழ்ச்சி ஒன்று வரவிருக்கிறது. “பேய்கள் நடமாடும் இடம்” என்ற தலைப்பில் ராய் குழுவினரின் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சி வரும் அக். 26, 2025 அன்று மாலை 7 மணிக்கு பண்டார் சென்தோசா MBDK மண்டபத்தில் நடைபெறுகிறது.

துணிச்சல் உள்ளவர்களே உள்ளே வாருங்கள்… இல்லையெனில் பின் வாங்குங்கள்! இது பேய்கள் நடமாடும் இடம்!” என்ற வாசகம் சமூக வலைத்தளங்களில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது ஒரு நேரடி திகில் நிகழ்ச்சி என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். நிகழ்ச்சியில் முழுக்க பேய்கள் சம்பந்தப்பட்ட பாடல்கள் பேய்கள் வேஷத்துடன் பாடகர்கள் பாடவிருப்பதால், பார்வையாளர்கள் உண்மையான திகிலை உணரக்கூடிய அனுபவம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

நிகழ்ச்சிக்கான நுழைவு சீட்டு விவரங்கள் பெற 016 – 632 4264 திரு.ராய் என்பவருடன் தொடர்புக்கொள்ளலாம்.

– யாழினி வீரா

Scroll to Top