Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

மலேசியாவில் நாதஸ்வரம் & தவில் இசையின் மகத்துவத்தைக் கொண்டாடும் நிதி திரட்டும் விழா

Picture: Veera Elanggovan

கோலாலம்பூர், 28 மே: தென்னிந்திய பாரம்பரிய இசையின் பெருமையை கொண்டாடும் வகையில் “நாதஸ்வர தவில் இசை நுண்கலை அகாடமி மலேசியா” முன்னெடுக்கும் மலேசியாவின் முதலாவது நாதஸ்வரம் மற்றும் தவில் பெருந் திருவிழா (1st Malaysia Natheswaram & Thavil Grand Festival) எதிர்வரும் ஜூலை 19, 2025 அன்று செந்துல், Galaxy Banquet Hall, HGH Convention Centre-இல் நடைபெறவுள்ளது.

இந்த விழா தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று செந்துலில் நடைபெற்றது. நிகழ்வில் அகாடமியின் நிர்வாகிகள், பயிற்சி பெற்ற மாணவர்கள் மற்றும் மக்கள் கலைஞர் கவிமாறன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவின் முக்கிய அம்சங்களை ஊடகங்களுடன் பகிர்ந்தனர்.

அவர்கள் கூறியதாவது:
அகில மலேசிய நாதஸ்வர தவில் கலைஞர்கள் இயக்கம் 2019-இல் ஆரம்பிக்கப்பட்டது. அதன் மூலமாக மலேசியாவின் பல இடங்களில் உள்ள தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்கள் ஒன்றிணைக்கப்பட்டனர். பின்னர், 2022-இல் இது ஒரு முழுமையான பயிற்சி அமைப்பாக வளர்ச்சியடைந்து, நாதஸ்வர-தவில் பாரம்பரிய இசையில் ஆர்வமுள்ள புதிய தலைமுறைக்கு திறமையான பயிற்சிகளை வழங்கும் நாதஸ்வர தவில் இசை நுண்கலை அகாடமியாக மாற்றப்பட்டது.

இந்த அகாடமி தற்போது சென்னை தமிழிசை சங்கத்துடன் இணைந்து, முறையான பாடத்திட்டத்துடன் தரமான பயிற்சிகளை வழங்கி வருகிறது. விழாவின் மூலமாக பெறப்படும் நிதி, நாடு முழுக்க பயிற்சி நிகழ்ச்சிகளை விரிவுபடுத்தவும், இசைக்கருவி வசதிகளை மேம்படுத்தவும், மேலும் புதிய தலைமுறைக்கு இசை கல்வியை சிறப்பாக வழங்கவும் பயன்படுத்தப்படவுள்ளது.

இசை விழாவில் நாதஸ்வர மற்றும் தவில் கலையினை பற்றி தனிப்பட்ட கண்காட்சியும் நடைபெற இருக்கிறது. நாட்டின் பிரபல கலைஞர்கள், பல்லின கலைஞர்களும் இதில் கலந்துகொண்டு இசையின் மகத்துவத்தை ஒலிக்கவிருக்கின்றனர்.

விழாவிற்கான நுழைவு சீட்டு கட்டண விவரங்கள்:

  • ஒரு மேஜை – RM10,000, RM5,000, RM3,000, RM1,500
  • தனிநபர் – RM150

அனைத்து மலேசிய தமிழர்களும் முழு ஆதரவுடன் இந்த விழாவில் கலந்து கொண்டு நமது இசைப் பாரம்பரியத்திற்கான சிறந்த உறுதுணையாக இருக்க வேண்டுமென ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்பு கொள்ள:

  • Mrs. Indrani Ganesan – 📞 016-4551791
  • Mr. A. Ganesan Pillai – 📞 014-3388756

இசை வாழ்க, பாரம்பரியம் பெருக!

-யாழினி வீரா

Scroll to Top