
படம் : இணையம்
வாஷிங்டன், 17 மே- சூரியனிலிருந்து வெளி வந்திருக்கும் காந்த புயல் நாளை பூமியை தாக்க வாய்ப்பு இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இது பல டிரில்லியன் அளவுக்கான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் சூரியனிலிருந்து இந்த புயல் கிளம்பியிருக்கிறது. சுமார் 10 லட்சம் கி.மீ நீளம் கொண்டிருக்கும் இது, நிலவுக்கு பக்கத்தில் வந்தாலே பூமியில் பாதிப்புகள் ஏற்பட தொடங்கிவிடும். காந்த துண்டை ஒரு நூலில் கட்டி தொங்கவிட்டால் அது வடக்கு-தெற்கு திசை பக்கம் பார்த்து நிற்கும். இதனை காந்த புலம் என்று சொல்வார்கள். பூமியில் இருப்பதை போலவே சூரியனிலும் காந்த புலம் இருக்கிறது. நம்முடைய நிலையானது என்று சொல்லலாம். ஆனால், சூரியனின் காந்தபுலம் 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறும். இப்படி நடக்கும்போது சூரியனிலிருந்து காந்த புயல் வெடித்து கிளம்பும். நேற்று முன்தினம் இப்படித்தான் வெடித்து கிளம்பியுள்ளது. இது இப்போது பூமி பக்கம் திருப்பியிருக்கிறது என்றும், நாளை பூமியை தாக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படி கிளம்பிய புயலுக்கு ‘பறவையின் சிறகு’ என்று பெயரிட்டிருக்கின்றனர். ஏனெனில் இப்புயல் பார்ப்பதற்கு பறவையின் சிறகை போல இருந்திருக்கிறது.
-ஶ்ரீஷா கங்காதரன்