Tazhal Media – தழல் மீடியா

/ Mar 06, 2026
Latest News
tms

“காசாவில் அமைதி ஏற்படுத்த அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட மலேசியா தயாராக உள்ளது”

Picture : Bernama

கோலாலம்பூர், அக்டோபர் 9 : GAZA-வில் அமைதி ஏற்படுத்தவும், 1967ம் ஆண்டுக்கு முன்பிருந்த எல்லைகள் அடிப்படையில் ‘East Jerusalem’ கிழக்கு ஜெருசலேம் தலைநகராகக் கொண்ட ஒரு சுயாட்சியுள்ள ‘Palestinian’ நாட்டை உருவாக்கவும், அமெரிக்கா மற்றும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயல்பட மலேசியா தயாராக இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது . ‘Hamas’ ஹமாஸ் மற்றும் ‘Israel’ இஸ்ரேல் இடையே “GAZA’ காசா மோதலை முடிக்க விரிவான திட்டத்தின்” முதல் கட்ட ஒப்பந்தத்தை மலேசியா வரவேற்றுள்ளது.

அமெரிக்க அதிபர் ‘President Donald Trump’ டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த இந்த திட்டத்தின் முதல் கட்டத்தை சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பும் உடனடியாகவும் முழுமையாகவும் நடைமுறைப்படுத்த வேண்டும் என மலேசியா வலியுறுத்தியுள்ளது.

அமைச்சகம் கூறியது “GAZA-வில்’ நடைபெறும் போரை முடிவுக்குக் கொண்டு வர ‘ Trump‘ டிரம்ப் எடுத்துள்ள தலைமைத்துவ முயற்சிக்கு மலேசியா நன்றி தெரிவிக்கிறது. மேலும் (Egypt, Qatar, and Türkiye,) எகிப்து, கத்தார், துருக்கி மற்றும் பிற நாடுகள் இந்த திட்டத்தை செயல்படுத்த முக்கிய பங்காற்றியுள்ளன,” எனவும் தெரிவித்தது.

இந்த முன்னேற்றம் GAZA-வில் நிகழும் படுகொலை, அழிவு மற்றும் பசியை நிறுத்துவதற்கும், சிறைவாசிகளின் பரிமாற்றத்திற்கும்,’Israel’ இஸ்ரேல் படைகள் முழுமையாக விலகுவதற்கும் வழிவகுக்கும் முக்கியமான படியாகும்.

கடந்த ஆண்டு அக்டோபர் முதல் தொடர்’,’Israel’ இஸ்ரேல் தாக்குதல்களில் 67,000க்கும் மேற்பட்ட உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Scroll to Top