Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

விஜய்யின் ‘ஜனநாயகன்’ புதிய போஸ்டர் வைரல் – முதல் சிங்கிள் சனிக்கிழமை ரிலீஸ்!

சென்னை, 07 நவ. – நடிகர் விஜய் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இந்தப் படத்தை ஹெச். வினோத் இயக்க, கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், ப்ரியாமணி, கெளதம் மேனன், நரேன், மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கான இசையை அனிருத் அமைத்துள்ளார்.

போஸ்டரில் விஜய் நடுத்தளத்தில் நின்று, அவரைச் சுற்றி பலர் கைகளை நெஞ்சின் மீது வைத்தபடி அவரை நோக்கி நிற்பது போல் காணப்படுகிறது. இந்த காட்சி, மக்களின் நம்பிக்கையையும், சமூக தலைவராக விஜயை வெளிப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது. ரசிகர்கள் இந்த போஸ்டரை “மக்களால் உருவான தலைவரின் உருவம்” எனக் குறிப்பிடுகின்றனர்.

மேலும், படக்குழு அறிவித்ததாவது, ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் முதல் பாடல் நவம்பர் 8 அன்று வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்தப் பாடல் விஜயின் அரசியல் நம்பிக்கைகளையும் சமூக நலக் கருத்துகளையும் வெளிப்படுத்தும் பாடலாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இப்படம் 2025 ஆம் ஆண்டின் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியிடப்பட உள்ளது. விஜய்யின் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படம் மிகுந்த உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. புதிய போஸ்டர் வெளியீட்டின் மூலம் ‘ஜனநாயகன்’ படம் அரசியல் பின்னணியில் ஒரு சமூகப் பொறுப்பை வெளிப்படுத்தும் படைப்பாக உருவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Scroll to Top