
ஜீ தமிழில் சிறந்த திறமையாளரை தேர்ந்தெடுக்கும் போட்டியாக மகா நடிகை என்கிற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பல்வேறு பெண்கள் திரையில் நடிகையாகும் தங்களது கனவுக்கு முதல் படியாக இந்த நிகழ்ச்சியை பார்க்கின்றனர். திறமை மற்றும் சிறந்த நடிகைகளை அடையாளம் காணும் நிகழ்ச்சியான இந்த மகா நடிகை நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களிலிருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், மலேசியாவிலிருந்து பிரபல நடிகை சாந்தினி கோர்ரும் கலந்து கொண்டுள்ளார். தனது அசாதாரண நடிப்பால் மக்களின் இதயத்து அரசியாக வலம் வருவதோடு மட்டுமில்லாமல் நடுவர்களின் மனம் கவர்ந்து, தற்பொழுது இறுதிச் சுற்றுக்கு தேர்வாகியுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் நடிகை சாந்தினி கோர்ருக்கு கூறி வருகின்றனர்.