Tazhal Media – தழல் மீடியா

/ Mar 15, 2025
Latest News
tms

சுகாதாரத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு: செலவைக் குறைத்து திறனை உயர்த்தும் – பிரதமர் அன்வார்

IMAGE: BERNAMA

டாவோஸ், 22 ஜனவரி — சுகாதாரத் துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு மட்டுமல்லாமல் செயல்திறனை அதிகரிக்கவும், செலவுகளை குறைக்கவும் முக்கிய பங்கு வகிக்கும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

“நான் அரசின் பொறுப்பைப் பெற்றதில் இருந்து எனது இரண்டு முன்னுரிமைகள் கல்வி மற்றும் சுகாதாரத்துறை தான். சிறந்த சுகாதார சேவைகளை மக்கள் பெரும்பாலுக்கு மறுப்பது என் அரசியல் தத்துவத்திற்கு விரோதமாகும். இதற்காக, மருத்துவமனைகளின் அடிப்படை வளங்கள் மற்றும் அதில் ஏஐயின் பங்களிப்பை மிக முக்கியமாகக் கருதுகிறேன். ஏஐ மூலம் உயர்தர தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதுடன், செலவினங்களில் வீணை தடுக்க முடிகிறது,” என்று உலகப் பொருளாதார உச்சி மாநாட்டில் (WEF) ‘Country Strategy Dialogue’ அமர்வில் அவர் கருத்து தெரிவித்தார்.

இந்த அமர்வில், முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு ஜப்ருல் அப்துல் அஜிஸ் கேள்விகளுக்கு பதிலளித்தபோது, ஏஐ மற்றும் பொதுச் சுகாதார அமைப்பின் பங்கை பற்றி பிரதமர் விளக்கினார்.

இதே அமர்வில், டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் தேவ், ஏஐவின் முழுமையான பயன்பாட்டிற்கு தரவுகளின் டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் பகிர்ந்து கொள்ளும் கட்டமைப்பு அவசியம் என்றார். “நிறைய தரவுகள் இன்னும் அனலாக் வடிவிலேயே உள்ளன. அவற்றை விரைவாக டிஜிட்டல் செய்ய வேண்டும். ஏஐயின் அடிப்படையில் பழைய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கண்டுபிடிக்கலாம். இது ஒரு முழுமையான அடித்தள அமைப்பை உருவாக்க உதவும்,” என அவர் கூறினார்.

அதே நேரத்தில், தேசிய ஏஐ அலுவலகம் (NAIO) சுகாதார அமைச்சு உள்ளிட்ட பல துறைகளுடன் இணைந்து பணி செய்வதாக தெரிவித்தார். முக்கிய பிரிவுகளை அடையாளம் காணவும், அரசின் முயற்சிகள் துல்லியமாகவும் பலனளிக்கவும் இந்த அணுகுமுறை உதவும் என அவர் கூறினார்.

WEF 2025-இல் பங்கேற்க பிரதமர் அன்வார் மூன்று நாள் அலுவல் பயணத்தில் உள்ளார். 2022ல் பிரதமராக பொறுப்பேற்ற பின்பு இது அவரின் முதல் கலந்தாய்வு ஆகும்.

-வீரா இளங்கோவன்

Scroll to Top