Tazhal Media – தழல் மீடியா

/ Apr 30, 2025
Latest News
tms

மலேசியர்களுக்குச் சிறந்த இந்தியப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்க ஆஸ்ட்ரோ மற்றும் சன் நெக்ஸ்ட் (Sun NXT) கூட்டாண்மையில் இணைந்துள்ளன

Picture: Astro

கோலாலம்பூர், 30 ஏப்ரல் 2025 ஆஸ்ட்ரோவில் சன் நெக்ஸ்ட் (Sun NXT) மூலம் அணுகக்கூடியத் துடிப்பான இந்தியப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் முதல், SCREAM (அலைவரிசை 100) அலைவரிசையில் விரைவில் ஒளியேரும் சிலிர்ப்பூட்டும் திரைப்படங்கள் மற்றும் புவி நாளை முன்னிட்டு ரிம்பா கிட்டா: ஸ்ட்ரீம் & வின் கிவ்அவே (Rimba Kita: Stream & Win Giveaway) வழியாகச் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு மீதான முக்கியத்துவம் வரை இந்த மே மாதம் அனைத்து மலேசியர்களுக்கும் விரிவான மற்றும் ஈர்க்கக்கூடிய அனுபவத்தை வழங்க ஆஸ்ட்ரோ உறுதிபூண்டுள்ளது.

இன்று முதல், அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் இந்தியப் பொழுதுபோக்குக்கானத் தளமானச் சன் நெக்ஸ்டை (Sun NXT) தங்களின் தற்போதையச் சந்தாக்களில் சேர்க்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி ஆகிய ஆறு இந்திய மொழிகளில் பல்வேறுத் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நேரலைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுடன் சன் நெக்ஸ்ட் (Sun NXT), ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் அல்ட்ரா/அல்டி பெட்டி, வலைத்தளம் அல்லது கைப்பேசி செயலி ஆகியவற்றில், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பல்வேறு இந்தியப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்குகிறது.

சன் நெக்ஸ்ட் (Sun NXT) இரண்டு வழியாக ஆஸ்ட்ரோவில் கிடைக்கப்பெறுகிறது:

  • சன் நெக்ஸ்ட் லைட் (Sun NXT Lite): அனைத்து இந்தியன் பேவரட்ஸ்/மகாராஜா தொகுப்பு வாடிக்கையாளர்களுக்கும் கூடுதல் கட்டணம் இல்லாமல் சேர்க்கப்பட்டுள்ள சன் நெக்ஸ்ட் லைட், சன் டிவி எச்டி, சன் மியூசிக் எச்டி, சன் லைஃப், சன் நியூஸ், ஆதித்யா மற்றும் கேடிவி ஆகிய ஆறு பிரபலமான சன் அலைவரிசைகளின் உள்ளடக்கத்தையும் 2,000 மணிநேரத்திற்கும் அதிகமான ஆன்-டிமாண்ட் உள்ளடக்கத்தையும் வழங்குகிறது.
  • சன் நெக்ஸ்ட் பிரீமியம் (Sun NXT Premium): அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களுக்கும் மாதம் ரிம25க்கு (பரிந்துரைக்கப்பட்டச் சில்லறை விலை ரிம28) கிடைக்கப்பெறும் இது, பல்வேறு மொழிகளில் 34 அலைவரிசைகளின் அணுகல் மற்றும் 50,000 மணிநேரத்திற்கும் அதிகமான ஆன்-டிமாண்ட் உள்ளடக்கம் உட்பட வாடிக்கையாளர்கள் முழு சன் நெக்ஸ்ட் (Sun NXT) நூலகத்தையும் அனுபவிக்கலாம். நீங்கள் அனைத்தையும் பார்க்கக்கூடிய ஓர் அற்புதமான அனுபவத்தை இது வழங்குகிறது.

ராயன், எதிர் நீச்சல் தொடர்கிறது, கயல், அன்னம், ஜெயிலர், ஆனந்த ராகம், இலக்கியா, ரஞ்சனி போன்றப் பிரபலமான நிகழ்ச்சிகளை ஸ்ட்ரீம் செய்யுங்கள். சன் நெக்ஸ்டை (Sun NXT) செயல்படுத்த அல்லது சந்தாதாரராக, www.astro.com.my/sunnxt-ஐ வலம் வரவும், MyAstro செயலியைப் பயன்படுத்தவும் அல்லது உங்கள் அல்ட்ரா/அல்டி பெட்டி வழியாக நேரடியாகப் பதிவுச் செய்யவும்.

அலறத் தயாராகுங்கள்! அலைவரிசை100-இல் இடைவிடாதத் திகில் காட்சிகள் காத்திருக்கின்றன, அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களுக்கும் இலவசம்

கூடுதல் கட்டணம் இல்லாமல் டிவி, ஆன் டிமாண்ட் மற்றும் ஆஸ்ட்ரோ கோ ஆகியவற்றிலும் சூகாவிலும் கிடைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டத் தலைப்புகளுடனும் அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களுக்கும் திகில் மற்றும் த்ரில்லர் உள்ளடக்கத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறப்பு பாப்-அப் அலைவரிசையான SCREAM (அலைவரிசை 100) வழி மே 1 முதல் 31, 2025 வரைத் திகில் இரசிகர்களுக்கு ஒரு விருந்துக் காத்திருக்கிறது.

கிங்ஸ்டன் (2025) & தி டோர் (2025) ஆகிய இரண்டு பிரத்தியேக முதல் ஒளிபரப்புகள்; ஹிஸ்டீரியா (Histeria), டுகுன் (Dukun), தி எக்ஸார்சிசம் பகுதி 1 & 2 (The Exorcism Part 1 & 2), தி ஐ (The Eye), பூட் (Bhoot), மார்னிங் கிரேவ் (Mourning Grave), அகு தஹு கபன் கமு மதி: தேசா புனோ டிரி (Aku Tahu Kapan Kamu Mati: Desa Bunuh Diri), பீ நாக் (Pee Nak) மற்றும் பல இரசிகர்களுக்குப் பிடித்தமானத் திரைப்படங்கள் உட்பட SCREAM (அலைவரிசை 100) தமிழ், மலாய், ஆங்கிலம், சீனம், இந்தி, கொரியா, இந்தோனேசியா மற்றும் தாய் ஆகிய எட்டு மொழிகளில் 160க்கும் மேற்பட்டத் திகில் தலைப்புகளைக் கொண்டிருக்கும்.

ரிம்பா கிட்டா: ஸ்ட்ரீம் & வின் கிவ்அவே (Rimba Kita: Stream & Win Giveaway) மூலம் புவி நாளைக் கொண்டாடுங்கள்

ஏர்த் டே ரிம்பா கிட்டா – ஸ்ட்ரீம் & வின் கிவ்அவே (Earth Day Rimba Kita – Stream & Win Giveaway) மூலம் நோக்கத்துடன் ஸ்ட்ரீம் செய்ய ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களை அழைக்கிறது. ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா முழுவதும் வானிலை எவ்வாறு வாழ்க்கையை வடிவமைக்கிறது என்பதைக் காட்டும் லவ் நேச்சர் (Love Nature) ஆவணப்படமான வைல்ட் ஸ்கை (Wild Sky)– ஐ ஆன் டிமாண்ட் மூலம் ஸ்ட்ரீமிங் செய்துப் பங்கேற்கவும். ஒவ்வொரு தனித்துவமான ஸ்ட்ரீமுக்கும், லவ் நேச்சர் (Love Nature) ஒரு மரத்தை நடுவதற்காக ஆஸ்ட்ரோவின் ரிம்பா கிட்டா நிதிக்கு (Astro’s Rimba Kita Fund) ரிம1 நன்கொடை அளிக்கும். ஒவ்வொரு பார்வையிலும், வாடிக்கையாளர்கள் நேரடியாகக் காடு வளர்ப்பு முயற்சிகளுக்குப் பங்களிப்பதோடு, ரிம5,000 வரை மதிப்புள்ளப் பிரத்தியேகக் கார்மின் விவோமுவ் ஸ்போர்ட் ஹைப்ரிட் ஸ்மார்ட்வாட்ச்களை (Garmin vívomove Sport hybrid smartwatches) வெல்லும் வாய்ப்பையும் பெறுகிறார்கள்.

இந்தப் பிரச்சாரம் மே 20, 2025 வரை நீடிக்கும், மேலும் வாடிக்கையாளர்கள் MyAstro செயலியில் உள்நுழைவதன் மூலம் இந்தப் பரிசுப் போட்டியில் பங்கேற்கலாம். மேல் விபரங்களுக்கு,  Earth Day Rimba Kita – Stream & Win | Astro Promotions எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் தங்கள் தொகுப்புகளை ஆட்-ஆன்கள் மூலம் எளிதாகத் தனிப்பயனாக்கலாம். இதில் சன் நெக்ஸ்ட் (Sun NXT),பிரைம் வீடியோ, மேக்ஸ் (Max), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), வியு (Viu), ஐஷியி (iQIYI), வீடிவி (WeTV), ஜீ5 (Zee5), சிம்ப்ளி சவுத் (Simply South) உட்பட 14 பிரபல ஸ்ட்ரீமிங் செயலிகள் அடங்கும். தங்கள் தொகுப்புகளைப் புதுப்பித்தல், ஆட்-ஆன்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கு இடையில் மாறுதல் அல்லதுப் புதியவற்றைத் தேர்ந்தெடுத்தல் உட்பட My Astro செயலி மூலம் வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் எந்த நேரத்திலும் தங்களதுச் சந்தாக்களில் எளிதாக மாற்றங்களைச் செய்யலாம்.

மாதத்திற்கு ரிம49.99 கட்டணத்தின் தொடக்கத்துடன் ஆஸ்ட்ரோ ஒன் தொகுப்புகளுக்குச் சந்தாதாரராகுங்கள். எளிதான ஸ்ட்ரீமிங், முடிவற்றப் பொழுதுபோக்கு. மாதத்திற்கு ரிம139.99 கட்டணத்தில் ஆஸ்ட்ரோ பைபரின் 500 எம்.பி.பி.எஸ்-ஐ பொழுதுபோக்குத் தொகுப்புடன் இணைத்து உங்கள் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மேம்படுத்துங்கள். ஆஸ்ட்ரோ ஒன் சந்தாதாரராக அல்லது மேம்படுத்த, www.astro.com.my அணுகவும் அல்லது 03 9543 3838 எண்ணுக்குப் புலனம் செய்தி அனுப்பவும்.

-வீரா இளங்கோவன்

Scroll to Top