Tazhal Media – தழல் மீடியா

/ Mar 15, 2025
Latest News
tms

டெலி ஸ்டார் புரோடக்க்ஷன் ஏற்பாட்டில் இனிமையான இசையுடன் வாழை இலை கறி விருந்து

Picture: Veera

கோலாலம்பூர், 6 மார்ச் — சிலாங்கூர் மாநிலம் பத்து கேவ்ஸ் பகுதியில் அமைந்துள்ள செங்கா அரங்கில், டெலி ஸ்டார் புரோடக்க்ஷன் நிறுவனம் ஏற்பாட்டில் இனிமையான இசையுடன் வாழை இலை கறி விருந்து நிகழ்வு (Authentic Banana Leaf Lunch with Melodious Musical Performance) வரும் ஏப்ரல் 6, 2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்வு காலை 11.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நடைபெறவுள்ளது. நிகழ்வில் பாரம்பரிய வாழை இலைச் சாப்பாடு வழங்கப்படுவதோடு, இனிமையான இசைக் கச்சேரியும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இது உணவு மற்றும் இசையை இணைக்கும் ஒரு இனிமையான அனுபவமாக அமையவுள்ளது.

நிகழ்வுக்கான அனுமதி அழைப்பிதழ் வழியாக மட்டும் வழங்கப்படும். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் 012-2123960 என்ற எண்ணில் முன்பதிவு செய்யலாம்.

இந்த நிகழ்வு ஒரு அன்பளிப்பு அடிப்படையிலான சமூக நல நிதி திரட்டும் முயற்சி என்பதைக் குறிப்பிட வேண்டும். “அன்னமிட்ட கை” சமூக நல அமைப்பிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த உணவு விருந்தின் மூலம் பெறப்படும் தொகை, சமூக சேவைக்காக பயன்படுத்தப்படும்.

இந்நிகழ்வு சமூக நலத்திற்காக தங்களின் சிறப்பான பங்களிப்பை வழங்க விரும்பும் அனைவருக்கும் ஒரு அரிய வாய்ப்பு. வாழை இலை சாப்பாட்டின் தனித்துவத்தையும், இனிமையான இசையின் மகிழ்ச்சியையும் ஒரே நேரத்தில் அனுபவிக்க இது ஒரு சிறந்த நிகழ்வாக இருக்கும்!

📍 நிகழ்வு விவரங்கள்:

📅 தேதி: 06-04-2025 (ஞாயிறு)
🕚 நேரம்: காலை 11:00 மணி – பிற்பகல் 2:00 மணி
📍 இடம்: Shenga Convention Hall, Batu Caves, Selangor (Mani Corner Restaurant அருகில்)

நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் சமூக சேவைக்காகவும், பாரம்பரிய உணவின் மகிழ்ச்சிக்காகவும் இதில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும் டெலி ஸ்டார் புரோடக்க்ஷன் நிறுவனருமான திரு. SP. மணிவாசகம் கேட்டுகொள்கிறார்.

இதுபோன்ற சமூகநல நிகழ்வுகள், மக்களிடையே ஒற்றுமையை வளர்த்தும், சமூகத்தில் உதவி தேவைப்படும் பலருக்கு கரம் கொடுக்கும் ஒரு சிறந்த முயற்சியாக இருக்கும். இவ்விழாவில் உங்கள் சிறந்த மதிய உணவுக்கான நேரத்தை கொண்டாடுங்கள்!

-வீரா இளங்கோவன்

Scroll to Top