
ஹைதராபாத்: பிரபல பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர், ஹைதராபாத் நிஜாம்பேட்டையில் உள்ள தனது குடியிருப்பில் தற்கொலை முயற்சி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கல்பனா வீட்டின் கதவு இரண்டு நாட்களாக திறக்கப்படாமல் இருந்ததை வீட்டு காவலாளர் கவனித்து, குடியிருப்புவாசிகளுக்கு தகவல் வழங்கியுள்ளார். அவருடைய கணவருக்கும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில், நிஜாம்பேட்டை போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசார், கல்பனாவை சுயநினைவின்றி கட்டிலில் சரிந்த நிலையில் காண்ந்தனர். அருகில் தூக்க மாத்திரை இருப்பது தெரிய வந்ததால், அவசரமாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கல்பனா ராகவேந்தர் யார்?
1980-ல் பிறந்த கல்பனா, புகழ்பெற்ற இசையமைப்பாளர், நடிகர் டி.எஸ். ராகவேந்திரா மற்றும் பாடகி சுலோச்சனா ஆகியோரின் மகள். 5 வயதில் பாடல்களை பாடத் தொடங்கிய கல்பனா, 2013ஆம் ஆண்டு 1500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சாதனை படைத்தார்.
சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக செயல்பட்டும், பேசும் கண்கள், திருப்பாச்சி அருவாள் போன்ற பாடல்களை பாடியும் பிரபலமானவர்.
தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கல்பனா விரைவில் நலம் பெற வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தித்து வருகின்றனர்.
-இளவரசி புவனஷங்கரன்