
பினாங்கு, 8 ஏப்ரல்: பினாங்கு காவல்துறை தலைமையகத்தில் இன்று மாலை நடந்த துப்பாக்கி விபத்தில், 58 வயது ஆண் போலீஸ் அதிகாரி தனது தலையில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பினாங்கு காவல்துறை தலைவர் ஹம்சா அகமட் வெளியிட்ட அறிக்கையில் மாலை 6.12 மணி அளவில், காவல்துறையின் பாதுகாப்பு அறையில் ஒருவர் தலையில் காயமடைந்த நிலையில் காணப்பட்டார். சம்பவ இட விசாரணையில், அதிகாரியின் துப்பாக்கியிலிருந்து ஒரு தோட்டாகி வெடித்தது என்பது தெரியவந்தது என்று தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக 1960 ஆயுதச் சட்டத்தின் பிரிவு 39 கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் ஹம்சா தெரிவித்தார்.
தற்போது அந்த அதிகாரி, பினாங்கு மருத்துவமனையின் அவசரநிலை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
“இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் வதந்திகள் பரப்பாமல் இருக்கவேண்டும். இது தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணையை பாதிக்கக்கூடும்,” என்றும் காவல்துறை தலைமை அறிவுறுத்தியுள்ளது.
-யாழினி வீரா