Tazhal Media – தழல் மீடியா

/ Apr 29, 2025
Latest News
tms

அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தடை

படம் : கூகுள்

வாஷிங்டன், 16 பிப்ரவரி- அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்வதைத் தடைசெய்யும் உத்தரவில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்ட நிலையில் அதனை அமல்படுத்தி அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர் சேர அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க ராணுவம் நேற்று வெளியிட்ட பதிவில், “மூன்றாம் பாலினத்தவர் இனி ராணுவத்தில் சேர அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் சேவையில் உள்ள உறுப்பினர்களுக்கு பாலின மாற்றம் தொடர்புடைய நடைமுறைகளைச் செய்வதோ, எளிதாக்குவதோ நிறுத்தப்படும்,” என்று தெரிவித்துள்ளது.

உடனடியாக அமலுக்கு வரும் வகையில், பாலின டிஸ்போரியா பாதிப்புக் கொண்ட தனிநபர்களுக்கான அனைத்து சேர்க்கைக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல் சேவையில் உள்ள உறுப்பினர்களுக்கு பாலினமாற்றத்தை உறுதிப்படுத்துவது அல்லது எளிதாக்குவது ஆகியவைகளுடன் தொடர்புடைய திட்டமிடப்படாத மற்றும் திட்டமிடப்பட்ட மருத்துவ நடைமுறைகளும் இடைநிறுத்தப்படுகின்றன.

கடந்த 2017 முதல் 2021 வரையிலான தனது முதல் பதவி காலத்திலும் ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்கள் சேவை செய்வதை தடை செய்தார். என்றாலும் இந்த உத்தரவினை அவர் முழுமையாக செயல்படுத்துவில்லை. அவரது நிர்வாகம் ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர் சேர்வதை தடுத்துவைத்திருந்தார். ஏற்கெனவே சேவையில் இருந்த மூன்றாம் பாலினத்தவரை அப்படியே அனுமதித்தது.

-ஶ்ரீஷா கங்காதரன்

Scroll to Top