
படம் : கூகுள்
சென்னை, 26 ஜனவரி- சிம்பு நடிக்கும் படத்தை இயக்க ‘பார்க்கிங்’ இயக்குநரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
‘தக் லைஃப்’ படத்தைத் தொடர்ந்து, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் சிம்பு. இதனை அஸ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளார். தற்போது ‘டிராகன்’ படத்தின் கவனம் செலுத்தி வருகிறார் அஸ்வத் மாரிமுத்து. அதன் பணிகள் முடிவடைந்தவுடன், சிம்பு படத்தின் முதற்கட்டப் பணிகளை கவனிக்கவுள்ளார்.
பல கதைகளைக் கேட்டு வந்த சிம்பு, ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் கூறிய கதைக்கு ஓகே கூறி விட்டார். இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிப்பதும் முடிவாகி இருக்கிறது.
எப்போது தேதிகள், படத்தின் பட்ஜெட் உள்ளிடவை முடிவானவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிகிறது. சிம்பு பிறந்த நாளன்று இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அன்றைய தினத்தில் வெளியாக வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் திரையுலகில்.
-ஶ்ரீஷா கங்காதரன்