Tazhal Media – தழல் மீடியா

/ Mar 06, 2026
Latest News
tms

பாதுகாக்கப்பட்ட காடுகளில் தற்காலிக டுரியான் தோட்டம் – பகாங் வனத்துறையின் கடும் நடவடிக்கை

படம்:ஊடகம்

ராவுப், 11 ஜூன் : பகாங் மாநில வனத்துறை (JPNP) கடந்த 2019ம் ஆண்டு முதல் இந்நாள் வரை 114 கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு, சட்டவிரோதமாக டுரியான் தோட்டங்களாக மாற்றப்பட்ட 59 வனக் காவல் பகுதிகளில் ஊடுருவல்களை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

வனத்துறை இயக்குநர் சைனுத்தீன் ஜமாலுத்தீன் கூறியதாவது, “கிளைமான், மோட்டார் சைக்கிள்கள், மற்றும் பூச்சிக்கொல்லி உபகரணங்கள் உள்ளிட்ட 101 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது ட்ரோன், செயற்கைகோள் மற்றும் வன ரோந்துப் பணி மூலம் கண்டறியப்பட்டது” என்றார்.

ஊடுருவல்களில் ஈடுபட்டவர்கள் 1984 ஆம் ஆண்டின் தேசிய வனச்சட்டத்தின் பிரிவுகள் 32, 47 மற்றும் 50 கீழ் கைது செய்யப்படலாம் என்றும், சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம் என்றும் கூறினார்.

தணிக்கைக்கு முன் சட்டவிரோத விவசாயிகளுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாகவும், நடவடிக்கைகள் கொடுமை அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.

தடை செய்யப்பட்ட துரியன் மரங்கள் வெட்டி அகற்றப்பட்ட பிறகு, மேற்கு வட்டார JPNP சில்விகல்சர் அலுவலகம் மராந்தி, மெர்பாவ், பெரா, கெருயிங் போன்ற தரமான மரங்களை நடுகின்றது.

2021ல், ரவுப் பகுதியில் உள்ள ப batu Talam வனக் காவல் பகுதியில் 101 ஹெக்டேர் Musang King தோட்டத்தில் 15,000 துரியன் மரங்கள் வெட்டப்பட்டன. அதற்குப் பதிலாக 20,000 மரங்கள் நடப்பட்டன.

நடப்பு ஆண்டு மே மாதம், சுங்கை ருவான் மற்றும் சுங்கை கிளாவிலும் சட்டவிரோத தோட்டங்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

JPNP வனக் காவல்ப் பகுதிகளில் துரியன் தோட்ட ஊடுருவலைக் கடுமையாக எதிர்த்து, தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகிறது.

-யாழினி வீரா

Scroll to Top