Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

‘சங்கராந்திக்கி வஸ்துணம் 2’ – வெங்கடேஷ் தகவல்

படம் ; கூகுள்

ஆந்திரா, 12 பிப்ரவரி- 2027-ம் ஆண்டு பொங்கலுக்கு ‘சங்கிராந்திக்கி வஸ்துணம்’ 2-ம் பாகம் வெளியாகும் என்று நடிகர் வெங்கடேஷ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

தெலுங்கில் பொங்கலுக்கு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘சங்கராந்திக்கி வஸ்துணம்’. உலகளவில் இதுவரை ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. ‘கேம் சேஞ்சர்’ படத்தின் மூலம் ஏற்பட்ட நஷ்டத்தினை இப்படம் தில் ராஜுவுக்கு ஈடுகட்டி இருக்கிறது. இப்படத்தின் வெற்றியை பல்வேறு வகையில் படக்குழு கொண்டாடி வருகிறது.

இதன் படக்குழுவினர் இறுதியாக நன்றி தெரிவிக்கும் விழா ஒன்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விழாவில் பேசும் போது அனில் ரவிப்புடி உடன் மீண்டும் இணையவுள்ளதாகவும், ‘சங்கராந்திக்கி வஸ்துணம்’ படத்தின் 2-ம் பாகமாக அது இருக்கும் எனவும் வெங்கடேஷ் குறிப்பிட்டார். மேலும், அப்படம் 2027-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்பதையும் உறுதிப்படுத்தினார்.

தற்போது ‘சங்கராந்திக்கி வஸ்துணம்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சிரஞ்சீவி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் அனில் ரவிப்புடி. அப்படமும் முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படமாக்கவுள்ளார்கள். அதனை முடித்துவிட்டுதான் ‘சங்கராந்திக்கி வஸ்துணம் 2’ இயக்கவுள்ளார் அனில் ரவிப்புடி.

-ஶ்ரீஷா கங்காதரன்

Scroll to Top