Tazhal Media – தழல் மீடியா

/ Sep 27, 2026
Latest News
tms

ASEAN25: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மலேசியாவுக்கு உத்தியோகபூர்வ பயணம்

கோலாலம்பூர், 25 அக். – அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்கள், வரும் அக்டோபர் 26 முதல் 27 வரை மலேசியாவுக்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார் என்று விச்மா புத்த்ரா இன்று அறிவித்துள்ளது.

இந்த பயணம், ASEAN–அமெரிக்கா உச்சி மாநாடு மற்றும் கிழக்கு ஆசியா உச்சி மாநாடு (East Asia Summit) ஆகியவற்றுடன் இணைந்து நடைபெறவுள்ளது. இப்பயணத்தின் போது டொனால்ட் டிரம்ப், மலேசிய பிரதமர் தத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களைச் சந்தித்து பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்துவது குறித்த ஆலோசனைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா–மலேசியா உறவுகள் பல துறைகளில் விரிவடைந்து வரும் நிலையில், இப்பயணம் இருநாடுகளுக்குமான வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, மற்றும் கல்வி ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்தும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், மக்களிடையே பரஸ்பர புரிதலை மேம்படுத்தும் புதிய ஒப்பந்தங்களும் இந்த சந்திப்பில் கையெழுத்தாகலாம் என்று கூறப்படுகிறது.

டொனால்ட் டிரம்ப் அவர்களின் இந்த உத்தியோகபூர்வ வருகை, தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான அமெரிக்காவின் தூதரக உறவுகளை மீண்டும் உறுதிசெய்யும் முக்கிய முன்னெடுப்பாகக் கருதப்படுகிறது. மலேசியா, ஆசியா பகுதியில் அமெரிக்காவுக்கு முக்கியமான மூத்த கூட்டாளியாக இருப்பதால், இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கிடையே புதிய ஒத்துழைப்பு அத்தியாயத்தைத் தொடங்கும் என நம்பப்படுகிறது.

-யாழினி வீரா

Scroll to Top