
இங்கிலாந்தைச் சேர்ந்த லாரா கோல்மன்-டே என்ற பெண், தனது கணவர் இரத்த புற்றுநோயால் உயிரிழந்ததுக்குப் பிறகு அவருக்கு அஞ்சலியாக திருமண ஆடையை அணிந்து லண்டன் மாரத்தானை முடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
பிபிசி தெரிவித்ததப்படி, 12 மாதங்களில் 13 மாரத்தான்கள் ஓடுவது என்பது அவரது தனிப்பட்ட சவால். இந்த முயற்சி, இரத்த புற்றுநோய் ஆராய்ச்சிக்கான நிதி திரட்டலைக் குறி வைத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
லண்டன் மாரத்தானில், மொத்தம் 26.2 மைல்களில் 23 மைல்கள் சாதாரண உடையுடன் ஓடிய லாரா, மாரத்தானின் இறுதி 3 மைல்களுக்கு தனது திருமண ஆடையை மாற்றி அணிந்து ஓட்டத்தை முடித்தார்.
“இந்த திருமண ஆடையை அணிந்து ஓடுவது மிகவும் சிரமமானதாக இருந்தது. ஆனால் என் கணவருக்காக நான் இதை செய்தேன்,” என லாரா கூறியுள்ளார். வெப்பம் மற்றும் ஆடையின் எடை காரணமாக சிரமம் ஏற்பட்டபோதிலும், பந்தயத்தை வெற்றிகரமாக முடித்ததிலே பெருமை கொள்கிறதாகவும் அவர் தெரிவித்தார்.
இது வெறும் ஓட்டம் அல்ல, ஒருவரின் அன்பையும், தியாகத்தையும் வெளிப்படுத்தும் ஒரு உணர்ச்சி நிகழ்வாகும்.
-ஸ்ரீ