Tazhal Media – தழல் மீடியா

/ Mar 15, 2025
Latest News
tms

மலேசிய ஊடக மன்றத்தின் சட்ட மசோதா நிறைவேற்றம் – ஊடக சுதந்திரத்திற்கான வரலாற்று முன்னேற்றம்

Picture: Google

கோலாலம்பூர், 27 கோலாலம்பூர் — மலேசிய ஊடக மன்றத்தின் சட்ட மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை வரலாற்றுச் சாதனையாக வரவேற்கப்படுகிறது என சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்துள்ளார். தகவல் அமைச்சகம் மற்றும் தற்காலிகக் குழுவின் ஒற்றுமையான முயற்சியின் மூலம், ஊடகங்கள் தன்னியல்பாகக் கட்டுப்படுத்தப்படுவதற்கான வழி அமைக்கப்பட்டுள்ளது. இது ஊடக சுதந்திரத்தையும் நெறிமுறைகளையும் வலுப்படுத்தும்.

1973 ஆம் ஆண்டில் முன்மொழியப்பட்ட ஊடக மன்ற உருவாக்கம், 2019 ஆம் ஆண்டு அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டது. பல ஆண்டுகளாக எழுச்சி கண்ட முயற்சியின் விளைவாக, நேற்று ஊடக தரநிலைகள், புகார்தீர் முறை, மற்றும் தொழில்முறை மேம்பாட்டிற்கான மையமாக இது அமைந்துள்ளது. மேலும், மன்றத்தின் ஆட்சி அமைப்பு சமத்துவமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் மற்றும் அரசு தொடர்பற்ற தலைவர், அரசுத் தரப்பில் இருந்து இரண்டு உறுப்பினர்கள், ஊடக நிறுவனங்கள், சங்கங்கள் மற்றும் பொதுமக்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் இடம் பெறுவர்.

பெர்னாமா சட்டத்திருத்தம் 1967ஆம் ஆண்டு சட்டத்தின் முதல் பெரிய புதுப்பிப்பு. இது மலேசிய ஊடகத்துறையை இன்றைய மாற்றங்களை நோக்கிச் செயல்பட வைக்கும். இந்த சட்ட நெறிமுறைகள் ஊடக துறையை சுயக்கட்டுப்பாட்டுடன், அனைவரையும் உள்ளடக்கியதும், மற்றும் எலக்ட்ரானிக் மற்றும் டிஜிட்டல் ஊடக வளர்ச்சிக்கு இணங்க முற்றிலும் மேம்படுத்துவதாக அமையும் எனவும் இந்த புதிய மாற்றங்கள் மலேசிய ஊடக உலகிற்கு ஒரு புதிய கட்டத்தை உருவாக்கும் எனவும் யுனேஸ்வரன் குறிப்பிட்டார்.

-யாழினி வீரா

Scroll to Top