Tazhal Media – தழல் மீடியா

/ Sep 27, 2026
Latest News
tms

சிபூவில் இருவர் மீது கொலை முயற்சி மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டு

Picture: Awani

சிபூ, 12 செப்டெம்பர் – கடந்த ஆகஸ்ட் மாதம் கனோவிட் பகுதியில் நடந்த கொலை முயற்சிக்காக, இருவர் இன்று சிபூ மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.

குற்றம்சாட்டப்பட்ட லயனல் கோ குவாங் டெக் (33), ஆகஸ்ட் 24ஆம் தேதி மாலை 5.20 மணியளவில், மஜாவ் சாலையில், லாவ் அங் ஹோ மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்ய முயன்றதாக கூறப்பட்டுள்ளது. இக்குற்றம் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 307ன் கீழ் வருவதால், அதிகபட்சம் 20 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

அவருக்கு உதவியதாக வொங் சிங் டியெங் (51) குற்றம் சாட்டப்பட்டுள்ளார். மேலும், தனி வழக்கில், கடந்த ஜூன் 2ஆம் தேதி காலை சுமார் 11 மணியளவில், சிபூ சுங்காய் மெரா போலீஸ் நிலையத்தில், அவர் தனது உடலில் அம்ஃபெடமின் மற்றும் மெத்தாம்ஃபெடமின் போதைப்பொருள் சேர்த்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த குற்றம் போதைப்பொருள் தடுப்பு சட்டம் 1952ன் கீழ் வருவதால், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 முதல் 13 ஆண்டு சிறைத்தண்டனைக்கும், 3 முதல் 6 தடவை சாட்டையடி தண்டனையும் விதிக்கப்படும்.

வழக்கு செப்டம்பர் 23ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும்.

– யாழினி வீரா

Scroll to Top