
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் கெட்டிஸ் தோட்டத்தில் 130 ஆண்டுகளாக அருள்பாலித்து வரும் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம், காலப்போக்கில் சில பழுதுகளைச் சந்தித்துள்ளது. இதனை சரிசெய்து ஆலய திருப்பணி பணிகளை தொடங்க, வரும் ஏப்ரல் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் ஆலய பாலஸ்தானம் நடைபெறவுள்ளது.
இதனால், அந்த பகுதியிலும், சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் வாழும் அனைத்து பக்தர்களையும், இந்த புனித நிகழ்வில் பங்கேற்க ஆலய நிர்வாகம் அன்புடன் அழைக்கிறது.
இத்தகைய ஆலய திருப்பணி நிகழ்வுகள், ஆலயத்தின் தெய்வீக சக்தியை மேம்படுத்த மற்றும் பக்தர்களுக்கு சிறப்பான ஆன்மிக அனுபவத்தை வழங்க உதவுகின்றன. அனைவரும் கலந்து கொண்டு மஹா மாரியம்மன் திருவருளைப் பெறும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என “மக்கள் கலைஞர்” கவிமாறன் தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.
-யாழினி வீரா