PICTURE:AWANI

கோலாலம்பூர், ஏப்ரல் 27 — பங்க்சார் பகுதியில் நடந்த கடும் மோதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபரை, மலேசிய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடந்த இரவு, பங்க்சார் கோர்ட் வீதியில் உள்ள ஒரு உணவகத்தின் அருகே இரு குழுக்களிடையே வாக்குவாதம் தொடங்கி, பின்னர் அது கைகலப்பாக மாறியது. இது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோலாலம்பூர் மாவட்ட போலீஸ் தலைவர் டத்தோ பெளலோன் அனான் தெரிவித்ததாவது, “சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஒருவர் தாக்குதலுக்கு பிறகு தப்பிச் சென்றுள்ளார். அந்த நபரை பிடிக்க விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது,” என்று கூறினார்.
சம்பவத்தில் ஒருவர் இடுப்புப் பகுதியில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலை தற்போதைக்கு நிலையானதாக தெரிவிக்கப்பட்டது.
போலீசார் தற்போது அருகிலுள்ள கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) மூலம் சம்பவத்தின் பதிவுகளை சேகரித்து வருகின்றனர். பொதுமக்களில் யாருக்காவது சம்பவம் தொடர்பான தகவல்கள் இருந்தால், உடனடியாக பங்க்சார் போலீஸ் நிலையத்தை தொடர்புகொள்ளுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
“அந்த சந்தேக நபர் 20-30 வயதுக்குள் இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். அவரைப் பிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன,” என போலீஸ் தரப்பினர் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
-முல்லை மலர் பொன் மலர் சோழன்