Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

உள்மாற்றம் தான் வெளிப்பட்ட வெற்றி — டத்தின் எஸ். காவேரியின் புதிய நூல் வெளியீடு

கோலாலம்பூர், 02 நவ. – “Inner Change, Outer Result” எனும் தலைப்பில் ஊக்கமூட்டும் புதிய நூலை எழுதியுள்ளார் டேட்டின் எஸ். கவேரி. மனிதனின் எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் உள்ளார்ந்த ஆற்றலின் மூலம் வாழ்க்கையில் வெளிப்படும் வெற்றியை அடைவது எப்படி என்பதைக் கூறும் இந்த நூல், வாசகர்களை தங்களின் மன உலகை மாற்றி வாழ்வை உயர்த்த வழிகாட்டுகிறது.

“Law of Attraction” என்ற தத்துவத்தின் ஆழமான விளக்கங்களுடன், அதை நமது நாளாந்த வாழ்வில் எளிமையாகப் பயன்படுத்துவது எப்படி என்பதை டேட்டின் கவேரி அவர்கள் தெளிவாக விவரித்துள்ளார். “உள்ளே மாற்றம் ஏற்பட்டால் தான் வெளியில் வெற்றி உருவாகும்” என்ற சிந்தனை, இந்நூலின் மையக் கருத்தாக திகழ்கிறது.

பல ஆண்டுகளாக மனித ஆளுமை மேம்பாட்டுத் துறையில் பணியாற்றி வரும் டேட்டின் எஸ். கவேரி அவர்கள் Law of Attraction Certified Trainer மற்றும் HRD Corp Accredited Trainer ஆகப் பரிச்சயமானவர். தன்னம்பிக்கை, தன்னிலை அறிதல் மற்றும் நேர்மறை ஆற்றல் வளர்ப்பு குறித்து பல்வேறு பயிற்சிகளை வழங்கி வந்த அனுபவத்தின் அடிப்படையில் இந்த நூலை எழுதியுள்ளார்.

If you can imagine, the universe is ready to deliver it” எனும் உன்னதமான வாசகம், இந்த நூலின் முக்கிய ஊக்கச் செய்தியாக நிறைகிறது. மன அமைதி, நம்பிக்கை மற்றும் நோக்கத்துடன் வாழ விரும்பும் ஒவ்வொருவரும் இதை வாசித்து பலம் பெறலாம்.

இந்நூல் தற்போது Amazon, Flipkart மற்றும் Notion Press போன்ற தளங்களில் கிடைக்கிறது.

டேட்டின் எஸ். கவேரி அவர்கள் Law of Attraction Certified Trainer மற்றும் HRD Corp Accredited Trainer ஆகப் பணியாற்றி வருகிறார். பல ஆண்டுகால அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, உண்மையான மன மாற்றமே வெளிப்பட்ட வெற்றிக்கான முதல் படி என்பதை இந்த நூலில் ஆழமான எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியுள்ளார்.

“நீ கற்பனை செய்ய முடிந்தால், பிரபஞ்சம் அதை உனக்குக் கொடுக்கத் தயாராக உள்ளது” என்ற ஆற்றல் நிறைந்த வரிகள், இந்நூலின் முக்கிய செய்தியாக திகழ்கிறது. வாழ்க்கையில் மாற்றம் தேடும் வாசகர்கள், தங்களைப் புதிய கோணத்தில் புரிந்து கொள்ள இந்த நூல் வழிகாட்டியாக இருக்கும்.

இந்நூல் தற்போது Amazon, Flipkart மற்றும் Notion Press தளங்களில் கிடைக்கிறது.

-யாழினி வீரா

Scroll to Top