
நிபோங் தெபால், 18 பிப்ரவரி — இன்று காலை 7.15 மணி அளவில், மோட்டார் சைக்கிள் மற்றும் லாரி மோதிய கோர விபத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த இரு மாணவர்கள் பயங்கரமான காயங்களுக்கு உள்ளாகினர். இந்தச் சம்பவம் சுங்காய் பாக்காப், ஜாலான் பெசார் பகுதியில் நிகழ்ந்துள்ளது.
விபத்தில், 5 வயது சிறுமியின் வலது காலை முழுவதுமாக இழந்தார். அவரது 7 வயது சகோதரன் இடது கையை இழந்தார். இந்தச் சம்பவம், அவர்களின் பாட்டி ஒட்டிய மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதியதன் காரணமாக நிகழ்ந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பாக பெறப்பட்ட தகவலின்படி, லாரி இடது வழியிலிருந்து திரும்ப முயன்ற போது, அதன் முன்புறம் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. அதிவேகத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியால் மூவரும் சாலையில் பலமாக வீழ்ந்தனர்.
மோட்டார் சைக்கிளை ஓட்டிய 50 வயதுடைய பாட்டியும் தலைப்பகுதியில் கடுமையான காயம் அடைந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பானக் காணொளிகள் சமூக வலைத்தளங்களிலும் பரவலாக பரவியது.
மலேசிய இராணுவப் பாதுகாப்பு படை (APM) சேபராங் பிறை தெற்கு பிரிவு இன்று காலை 7.40 மணிக்கு தகவல் பெற்றவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தது.
“சம்பவ இடத்தை சென்று பார்த்தபோது, மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு மண் ஏற்றிச் சென்ற லாரி மோதியதாக கண்டறியப்பட்டது. இரண்டு சிறுவர்கள் கடுமையாக காயம் அடைந்ததால், உடனடியாக சுங்காய் பாக்காப் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்,” என்று APM செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து போக்குவரத்து சட்டத்தின் 43 (1) பிரிவு, 1987-ன் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வமான அதிகாரபூர்வ அறிக்கைப் போலீசார் வெளியீட்டு உள்ளனர். பொதுமக்கள், இந்த சம்பவத்தால் மிகவும் வருந்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர்.


-வீரா இளங்கோவன்