
கோலாலம்பூர் – மலேசிய வானிலைத் துறை (MetMalaysia) இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், ஏழு மாநிலங்களில் புயல், கடும் மழை மற்றும் பலத்த காற்றுக்கான எச்சரிக்கையை அறிவித்துள்ளது.
இந்த எச்சரிக்கை பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக் மற்றும் சிலாங்கூர் மாநிலங்களில் உள்ள சபாக் பெர்னாம், கோலா சிலாங்கூர், கிளாங், பெட்டாலிங், கோலா லங்காட் மற்றும் சிப்பாங் பகுதிகளை உள்ளடக்கியதாகும்.
மேலும், புத்ராஜெயா, ஜொகூர் மாநிலத்தில் உள்ள பத்து பாஹாட் மற்றும் பொந்தியான் ஆகிய பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை பொருந்துகிறது.
சரவாக் மாநிலத்தில் உள்ள முகா, தாவாவ், பிந்துலு ஆகிய பகுதிகளும் பாதிக்கப்படும் என வானிலைத் துறை தெரிவித்துள்ளது.
இந்த பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் பயணிகள், தற்போதைய வானிலை சூழ்நிலையை கவனிக்க வேண்டும் என்றும், அத்தியாவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் MetMalaysia தெரிவித்துள்ளது.
மழை காரணமாக வெள்ளம், மின் நெருக்கடி மற்றும் பசுமை மரங்கள் விழும் அபாயம் இருப்பதால், அனைவரும் எச்சரிக்கையாக இருக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
-வீரா