
ஹாங்காங், 23 செப். – ஹாங்காங் நகரை சென்று செல்லும் பயணிகளுக்கு எதிர்பாராத தடை ஏற்படுத்தும் சூறாவளி ‘ரகாசா’ முன்னெச்சரிக்கையின்படி பல விமான நிறுவனங்கள் சேவைகளை ரத்து செய்துள்ளன. குவான்டாஸ் விமான நிறுவனம் அறிவித்ததன்படி, ஹாங்காங் அனைத்துலக விமான நிலையம் செப்டம்பர் 23 இரவு 8 மணி முதல் செப்டம்பர் 25 காலை 8 மணி வரை 36 மணிநேரத்திற்கு மூடப்படும்.
இதனைத் தொடர்ந்து, ஹாங்காங் அருகிலுள்ள ஷென்செனுக்கு செல்லும் SIA விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, கெத்தே பசிஃபிக்கின் 500க்கும் மேற்பட்ட சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் ஸ்கூட் மன்னிப்பு தெரிவித்து, மாற்று திட்டங்கள் மற்றும் ரீஃபண்ட் வசதிகளை வழங்குவதாக அறிவித்துள்ளன. ஸ்கூட், பயணிகள் பயணத்தை மேற்கொள்ள விரும்பவில்லை என்றால் முழு கட்டணமும் திருப்பி தரப்படும் என்றும் தெரிவித்துள்ளார். SIA பயன்படுத்தப்படாத டிக்கெட்டுகளுக்கான பணத்தை திரும்பப் பெறுமாறு பயணிகளை கேட்டுக் கொண்டுள்ளது.
இதனிடையே, ஹாங்காங் நகரத்தைக் தவிர்த்து மற்ற வட்டாரங்களுக்கான விமானப் பயணங்களும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக இரு நிறுவனங்களும் அறிவித்துள்ளன. மேலும், சைனா ஏர்லைன்ஸ் செப்டம்பர் 23 இன்று தைவானுக்கான சேவைகளை ரத்து செய்துள்ளது.
-ஸ்ரீ



