Tazhal Media – தழல் மீடியா

/ Mar 15, 2025
Latest News
tms

துளசி செடியை வழிபடுவதன் மூலம் பொருளாதார பிரச்சினைகளை தீர்த்து, லட்சுமி தேவியின் அருளைப் பெறலாம்

Picture : Google

பணம் சம்பாதிக்க நாம் தினமும் கடுமையாக வேலை செய்கிறோம். ஆனால் பல சமயங்களில், சம்பாதிக்கும் தொகை வீடு திரும்புவதற்குள் முழுவதுமாக செலவாகி விடுகிறது. வீட்டில் பணம் நிலைக்காமல் போனால், துளசி செடியை வழிபடுவதன் மூலம் பொருளாதார பிரச்சினைகளை தீர்த்து, லட்சுமி தேவியின் அருளைப் பெறலாம் என ஜோதிட நிபுணர்கள் கூறுகிறார்கள்.

துளசி – மகாலட்சுமியின் திருவடிச் சின்னம்

வேத சாஸ்திரத்தின்படி, துளசி செடி மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. பகவான் கிருஷ்ணருக்கு இது மிகவும் பிரியமானது. வாஸ்து குறைபாடு உள்ள வீட்டிலும் துளசி செடியை வளர்த்தால், பொருளாதாரத்திற்குப் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பணச் சிக்கலிலிருந்து விடுபட பரிகாரம்

ஜோதிட நிபுணர் பண்டிட் அஜய் காந்த் கூறுகையில்:
🔸 துளசியின் இலைகளை சிவப்பு துணியில் கட்டி, வீட்டின் அலமாரியில் வைத்தால், செல்வம் நிலைக்கும்.
🔸 துளசி செடியின் அடியில் இருக்கும் மண்ணை சிவப்பு பட்டுத் துணியில் கட்டி, லட்சுமி தேவியின் பாதத்தில் வைத்து “ஓம் ஸ்ரீம்” மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும். இதனால் பணக்கஷ்டம் நீங்கும்.
🔸 வெள்ளிக்கிழமைகளில், லட்சுமி தேவிக்கு துளசி இலையை சமர்ப்பிப்பது மங்களகரமானது.
🔸 திருமணத்தடை நீங்க, துளசி பூவை பாலில் கலந்து சிவலிங்கத்திற்கு அர்ச்சனை செய்யலாம்.
🔸 துளசி வேரை சிவப்பு துணியில் கட்டி, வீட்டில் வைத்தால், சம்பாதிக்கும் பணம் வீணாக செல்லாது.

இந்த பரிகாரங்களைச் செய்து வந்தால், வீட்டில் செல்வம் தங்கி, பொருளாதார நிலை மேம்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

-யாழினி வீரா

Scroll to Top