
கோலாலம்பூர், 11 மார்ச் — மலேசிய தொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணையம் (MCMC) அறிவித்ததாவது, இந்து மதத்தினரை அவமதித்ததாக குற்றம்சாட்டப்பட்ட Era FM ரேடியோ நிலையம் இடைநிறுத்தப்படாது.
இதற்கான முடிவு, Era FM-ன் உரிமம் பெற்ற Maestra Broadcast Sdn Bhd நிறுவனத்தின் மன்னிப்பும், எடுத்து கொள்ளப்பட்ட திருத்த நடவடிக்கைகளும் கருதிய பிறகு எடுக்கப்பட்டது.
மேலும், Melody FM, Mix FM போன்ற மற்ற ரேடியோ நிலையங்களின் செயல்பாடுகளுக்கும் தாக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக MCMC தெரிவித்தது.
மார்ச் 7ஆம் தேதி Era FM-ன் உரிமம் நீக்கப்படும் என MCMC நோட்டீஸ் வழங்கிய நிலையில், Maestra Broadcast நிறுவனம் அதற்கெதிராக முறையிட்டது.
இருப்பினும், 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டத்தின் (Communication and Multimedia Act) 233வது பிரிவின்படி, பிற மதத்தினரை அவமதிக்கும் உள்ளடக்கங்களை TikTok-ல் பதிவேற்றியதற்காக Era FM வானொலி நிறுவனத்திற்கும் Maestra Broadcast Sdn Bhd நிறுவனத்திற்கும் RM250,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-யாழினி வீரா