
படம் : புதியதலைமுறை அகப்பக்கம்
சென்னை, 31 ஜனவரி -‘பராசக்தி’ படத்தை டிஜிட்டல் வடிவில் மேம்படுத்தி வெளியிட திட்டமிட்டிருப்பதால் அந்த பெயரைப் வேறு யாரும் தங்களுடைய திரைப்படத் தலைப்பாகப் பயன்படுத்துவதைத் தவிர்த்திடவேண்டும் என்று நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம் கேட்டுக் கொள்கிறது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில், கருணாநிதி வசனத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அறிமுகமான, 1952 வெளியான திரைப்படம் பராசக்தி. இந்தத் திரைப்படத்தை நேஷனல் பிக்சர்ஸ் சார்பில் எங்களுடைய தாத்தா பெருமாள் முதலியார் தயாரித்தார். ஏவிஎம் நிறுவனம் சில ஏரியாக்களின் விநியோக உரிமையை மட்டுமே பெற்றிருந்தது.
“விரைவில் வெள்ளிவிழா (75வது ஆண்டு) காண இருக்கும் வேளையில், ‘பராசக்தி’ திரைப்படத்தை டிஜிட்டல் வடிவில் மேம்படுத்தி வெளியிட நாங்கள் (நேஷனல் பிக்சர்ஸ்) திட்டமிட்டு அதற்கான பணியைத் தொடங்கவிருக்கிறோம்”,என்ற மகிழ்ச்சியான செய்தியை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிவித்துள்ளது.
-ஶ்ரீஷா கங்காதரன்