Tazhal Media – தழல் மீடியா

/ Mar 15, 2025
Latest News
tms

வரும் 27-ஆம் திகதி நாடு முழுவதும் “கருப்பையா பெருமாள்” மலேசியத் திரைப்படம் வெளியீடு

நாடறிந்த கலைஞர் பென்ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள “கருப்பையா பெருமாள்” திரைப்படம், நாடு முழுவதும் வரும் 27 பிப்ரவரி அன்று வெளியாக உள்ளது. திரில்லர், ஆக்‌ஷன், காமெடி என பல்வேறு அம்சங்களைக் கொண்ட இத்திரைப்படத்தை இமஜினஷன் மேக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சுவாரா செனிமான் புரோடக்க்ஷன் நிறுவனமும் தயாரித்துள்ளனர். படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக டத்தோ ஏ.கே தேவராஜா. பணியாற்றியுள்ளார். படத்தின் பின்னணி இசை இசையமைப்பாளர் எம்.ஸ்ரீயின் வழங்கியுள்ளார். இப்படம் மலேசியாவின் பினாங்கு, ஜோகூர் பாரு, மலாக்கா போன்ற பல்வேறு நகரங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியும் நடித்தும் உள்ளார் பென்ஜி.

எஸ்கே நாகேன் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இப்படத்தில் நாட்டின் பண்பட்ட கலைஞர் கே.எஸ். மணியம், பென்ஜி, அகோந்திரன், டத்தோ ஏ.கே. தேவராஜா, “மக்கள் கலைஞர்” கவிமாறன்,ஹேமாஜி, ரூபன், மின்னல் எப்.எம் RJ திரேசா, சதீஸ்வரன், விஜி பிரகாஷ், மணிராஜூ பத்துமலை, டேவிட் அந்தோணி, தெடி, சசிதரன் ராஜு, எம்.ஜி.ஆர். சுரேஷ், பிரபா கமல், ஜீ குட்டி, டீச்சர் விக்டர் மற்றும் மேலும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ட்ரெய்லர் தற்பொழுது யூடியூபில் வெயியாகியுள்ளது. மலேசிய ரசிகர்களின் ரசனைக்கேற்ப படத்தில் பல அம்சங்கள் இருப்பதால் படம் நிச்சயம் மலேசியர்கள் மத்தியில் வரவேற்கப்படும் என்று படக்குழுவினர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

படத்தின் ட்ரெய்லர் கீழே காணலாம்:

Scroll to Top