
அரிசோனா, 20 பிப்ரவரி — அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில், இரு சிறிய ரக விமானங்கள் நடுவானில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம், அரிசோனாவின் தெற்கில் உள்ள மரானா விமான நிலையத்திற்கு அருகே நடந்துள்ளது.
விபத்தின்போது, ஒரு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதுடன், மற்றொரு விமானம் வெடித்து சிதறியதில் 2 பேர் உயிரிழந்தனர். சம்பவம் குறித்து அமெரிக்க விமான போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீப நாட்களில் வட அமெரிக்காவில் தொடர்ந்து விமான விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த மாதத்தில் மட்டும் நான்கு பெரிய விபத்துக்கள் பதிவாகியுள்ளன. அலஸ்காவில், வர்த்தக ஜெட்லைனர் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் மோதியதில் 67 பேர் உயிரிழந்தனர். அதேபோல், பிலடெல்பியாவில் மருத்துவ போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளாகி 7 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவங்கள், விமானப் போக்குவரத்து பாதுகாப்பு குறித்து புதிய கேள்விகளை எழுப்பி வருகிறது. இது தொடர்பாக அமெரிக்க அரசு மற்றும் விமானப் போக்குவரத்து துறைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றன.
-யாழினி வீரா