
சிலாங்கூர், ஏப்ரல் 4: தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, அங்கத்தான் மூடா கெஅடிலான் (AMK) சிலாங்கூர் உறுப்பினர்கள் புத்ரா ஹைட்ஸ் மசூதி தற்காலிக மறுவாழ்வு மையத்தில் (PPS) யோகபாரதி ராஜேந்திரனுடன் இணைந்து உதவியுள்ளனர்.
AMK சிலாங்கூர் நலத்துறை தலைவராகவும், மெஸ்ரா மாஜு நல அமைப்பின் பிரதிநிதியாகவும் இருக்கும் யோகபாரதி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டார். “சமூக நலனை முன்னிலைப்படுத்தி, அவசர காலங்களில் விரைவான உதவி வழங்குவதே முக்கியம்,” என்று அவர் கூறினார்.
மேலும், சிலாங்கூர் இளைஞர் இயக்க நிர்வாகியாகவும், கோலா லங்காட் மாநகரசபை துணை அதிகாரியாகவும் பணியாற்றும் யோகபாரதி, தீ விபத்து குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டார். தற்போது, மீட்புப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற்று, பாதிக்கப்பட்டவர்கள் நிலைமை சீராக உள்ளது. அரசாங்கம் சம்பந்தப்பட்ட நிர்வாகம், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் PeBS சிலாங்கூர் குழுவினர் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகின்றனர்.
“தலைமை என்பது வெறும் வார்த்தைகளால் நிரம்பியதாக இருக்கக் கூடாது; நேரடி செயல்பாடுகள் மிக முக்கியம்,” என்று AMK கோலா லங்காட் தலைவர் பதவிக்கு போட்டியிடும் யோகபாரதி உறுதி தெரிவித்தார்.
-வீரா இளங்கோவன்